சத்தமின்றி செய்கை: ரூ.6,999 விலையில் அட்டகாச ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போன்- தாராளமா வாங்கலாம்!

|

ரியல்மி இந்திய சந்தையில் நார்சோ 30, நார்சோ 30 5ஜி, ஸ்மார்ட் டிவி முழு எச்டி 32 இன்ச் மற்றும் ரியல்மி பட்ஸ் க்யூ 2 உள்ளிட்ட சாதனங்களை அறிமுகப்படுத்தியது. மேலும் நிறுவனம் ஜூலை 1 ஆம் தேதி வேறு சில சாதனங்களையும் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி சி11 (2021)

ரியல்மி சி11 (2021)

இதற்கிடையில் நிறுவனம் சத்தமின்றி ரியல்மி இந்தியாவில் அதன் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனான ரியல்மி சி11 (2021)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதே ஸ்மார்ட்போன் நாட்டில் அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே விற்பனைக்கு பட்டியலிடப்பட்டது.

ரியல்மி சி11 (2021) விலை

ரியல்மி சி11 (2021) விலை

ரியல்மி சி11 (2021) விலை குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.6,999 ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ரியல்மி.காம் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது இது ரூ.6,799 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இது கூல் க்ரே, கூல் ப்ளூ ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ரியல்மி சி11 (2021) விவரக்குறிப்புகள்

ரியல்மி சி11 (2021) விவரக்குறிப்புகள்

ரியல்மி சி11 (2021) விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் மினி டிராப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் 1600 x 720 பிக்சல்களோடு வருகிறது. 20: 9 என்ற விகிதத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பிந்புற கேமரா அமைப்பைக் குறித்து பார்க்கையில், இந்த கேமரா அம்சம் கைரேகை ஈர்ப்பதில் இருந்து விடுபடுகிறது. மேலும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் என்பதால் கைரேகை சென்சார் இதில் இல்லை.

2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு

2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு

அதன் ஹூட்டின் கீழ், ரியல்மே சி 11 (2021) ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி 9863ஏ செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனான 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு அம்சத்தோடு வருகிறது. இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ரியல்மி யுஐ கோ பதிப்பில் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இது வருகிறது. ரியல்மி சி 11 (2021) பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் உட்பட ஒற்றை 8 எம்பி பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. டிஸ்ப்ளேயின் மேல் மையத்தில் உச்ச நிலைக்குள் 5 எம்பி செல்பி கேமரா துளை பொருத்தப்பட்டுள்ளது.

 பல பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு போட்டி

பல பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு போட்டி

இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 9ஏ சாதனத்துக்கு போட்டியாக கருதப்படுகிறது. ரியல்மி சி 11(2021) நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாகும். விலை மற்றும் விவரக்குறிப்புகளை பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் ரெட்மி 9ஏ சாதனத்துக்கு ஒத்ததாக இருக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்02, டெக்னோ ஸ்பார்க் 7 உட்பட பல பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு எதிராக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme Launched its Realme C11 (2021) in India at Budget Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X