Home
Mobile

5Gக்கு மாற வேண்டிய நேரம் வந்துருச்சு: யோசிக்காம இந்த Realme போன் வாங்கி கெத்து காட்டுங்க.. விலை இதோ!

ரியல்மி நிறுவனத்தின் Realme 10 Pro+ மற்றும் Realme 10 Pro ஸ்மார்ட்போன்கள் சீனாவில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனானது டூயல் பேண்ட் Wi-Fi ஆதரவுடன் வெளியாகி இருக்கிறது. புதிய ப்ரீமியம் 5ஜி போன் வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்

Realme 10 Pro+

Realme 10 Pro+

டாப் ஆஃப் தி லைன் மாடலாக Realme 10 Pro+ வெளியாகி இருக்கிறது. இதில் 6.7 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவுடன் கூடிய 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த டிஸ்ப்ளே ஆனது 2,160Hz பல்ஸ்-வித்த் மாடுலேஷன் (PWM) மற்றும் 800 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி சமீபத்தில் Realme 10 4G மற்றும் Realme 10 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

Realme 10 Pro+ வேரியண்ட்

Realme 10 Pro+ வேரியண்ட்

Realme 10 Pro+ விலை குறித்து பார்க்கலாம். Realme 10 Pro+ ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது.

புது ஸ்மார்ட்போன் விலை விவரம்

புது ஸ்மார்ட்போன் விலை விவரம்

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,699 (தோராயமாக ரூ.19,500) என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,999 (தோராயமாக ரூ.23,000) மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் CNY 2,299 (தோராயமாக ரூ.26,500) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

பக்கா ப்ரீமியம் 5ஜி போன்

பக்கா ப்ரீமியம் 5ஜி போன்

இந்த ஸ்மார்ட்போனானது நைட், ஓஷன் மற்றும் ஸ்டார் லைட் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த ரியல்மி ஸ்மார்ட்போனானது நவம்பர் 24 முதல் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும். பக்கா ப்ரீமியம் 5ஜி போனை மிட் ரேன்ஜ் விலைப் பிரிவில் வாங்கலாம். ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது.

Realme 10 Pro+ சிறப்பம்சங்கள்

Realme 10 Pro+ சிறப்பம்சங்கள்

Realme 10 Pro+ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கிறது. 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த டிஸ்ப்ளே.

மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி

பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த புதிய ரியல்மி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. டூயல் சிம் ஆதரவு கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் இதுவாகும்.

108-மெகாபிக்சல் முதன்மை கேமரா

108-மெகாபிக்சல் முதன்மை கேமரா

Realme 10 Pro+ ஆனது 108-மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் இரண்டாம் நிலை கேமராவாகவும் மற்றும் 2 எம்பி மோனோக்ரோம் லென்ஸ் மூன்றாம் நிலை கேமராவாகவும் இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றிருக்கிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 மூலம் இயக்கப்படுகிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme Launched its Realme 10 Pro+ at Mid Range Price With 108MP Camera, Android 13.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X