Home
Mobile

ரியல்மி சி20 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமா?- இதோ முழு விவரங்கள்!

ரியல்மி நிறுவனம் முன்னதாகவே சி சீரிஸில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரியல்மியின் சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ரியல்மி முன்னதாக ரியல்மி சி11, ரியல்மி சி12, ரியல்மி சி15 மற்றும் ரியல்மி சி17 ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.

ரியல்மி சி20 ஸ்மார்ட்போன்

ரியல்மி சி20 ஸ்மார்ட்போன்

இந்த நிலையில் ரியல்மி சி20 என்றழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்.

சி சீரிஸ் ஸ்மார்ட்போன்

சி சீரிஸ் ஸ்மார்ட்போன்

ரியல்மி சி சீரிஸ் ஸ்மார்ட்போன் தாய்லாந்தின் தொலைத்தொடர்பு என்பிடிசி தளத்தில் மாதிரி எண் ஆர்எம்எக்ஸ்3061 உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் பெயரை உறுதிசெய்யவில்லை. ரியல்மி சி20 என்று கூறப்படும் இந்த அம்சங்கள் குறித்த விவரங்கள் எதுவும் தற்போதுவரை வெளியாகவில்லை.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்

ரியல்மி அடுத்த ஸ்மார்ட்போன் ரியல்மி சி20 என வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிப்ஸ்டர் அறிக்கையின்படி இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

இதே மாடல் எண் முன்னதாக எஃப்சிசி வெளியிட்டது. அதில் சி20 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் என கூறப்படுகிறது. ரியல்மி சி20 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சதுரவடிவ மூன்று கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Realme is Reportedly Launching Realme C20 Smartphone in India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X