Home
Mobile

Realme Narzo 30 மிரட்டலாக ஜனவரியில் அறிமுகம்.. வாங்க நீங்க ரெடியா?

ரியல்மி நிறுவனத்தின் நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ரியல்மி நிறுவனம் அடுத்த நார்சோ மாடலை ரியல்மி நார்சோ 30 என்ற பெயரில் 30 புதிய சீரிஸை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது.

நார்சோ 20-க்கு அடுத்தபடியாக நார்சோ 30

நார்சோ 20-க்கு அடுத்தபடியாக நார்சோ 30

ரியல்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் சீரிஸில், நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் ஒன்றாகும். இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்டியலின் கீழ் நார்சோ 20, நார்சோ 20ஏ மற்றும் நார்சோ 20 ப்ரோ ஆகிய சாதனங்களை அறிமுகம் செய்தது.

நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்

நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்

இந்த ரியல்மி நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து நிறுவனம் தற்பொழுது நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தயாராகி வருகிறது. ரியல்மி நார்சோ தொடரில் 30 சீரிஸ் ஜனவரி 2021 இல் அறிமுகமாகும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ஏ

நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ஏ

நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ஏ என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை நிறுவனத்திடமிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான தகவலின்படி ஜனவரி முதல் வாரத்தில் அல்லது டிசம்பர் இறுதி வாரத்தில் நிறுவனத்திடமிருந்து ஏதேனும் தகவல் வெளியாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரக்குறிப்புகளும், சிறப்பம்சங்களும்

விவரக்குறிப்புகளும், சிறப்பம்சங்களும்

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் RMX3171 என்ற மாடல் எண்ணுடன் இந்திய தரநிலை பணியகம் (BIS) பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஸ்மார்ட்போன் பற்றி வேறு எந்த விவரக்குறிப்புகளும், சிறப்பம்சங்களும் வெளியாகவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் விரைவில் அடுத்த தகவலை நாம் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme is planning to launch the Narzo 30 around January 21, 2021 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X