மார்ச் 18 வரை Realme Holi Sale.. 5 போன் மீது ரூ.4000 வரை டிஸ்கவுண்ட்.. ரூ.6,999 போதும் புது மாடல் வாங்கலாம்!
ரியல்மி நிறுவனமானது 2025 ஆம் ஆண்டிற்கான ஹோலி சிறப்பு விற்பனையை (Realme Holi Sale 2025) அறிவித்து உள்ளது. இது இன்று தொடங்கி, அதாவது மார்ச் 12 ஆம் தேதி முதல் மார்ச் 18 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் கீழ், மொத்தம் 5 ரியல்மி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன.
01. ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro): ரியல்மி ஹோலி விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.2000 தள்ளுபடியை பெற்று ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கிறது.

02. ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி (Realme Narzo 70 Turbo 5G): ரியல்மி ஹோலி விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.2500 தள்ளுபடியை பெற்று ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T): ரியல்மி ஹோலி விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.4000 தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65): ரியல்மி ஹோலி விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.2500 தள்ளுபடியை பெற்று ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61): ரியல்மி ஹோலி விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.500 தள்ளுபடியை பெற்று ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிசைனை பொறுத்தவரை இது கிளாஸ் போன்ற பினிஷ் கொண்ட டூயல் டோன் ரியர் பேனலை (Dual-tone rear Panel with a mirror-like finish) கொண்டுள்ளது. அதில் 2 கேமரா மாட்யூல்கள் (2 camera modules) மற்றும் டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual-LED flash) உள்ளது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1 முதல் 120ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Variable Refresh Rate), 6,000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2780 x 1264 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 100% டிசிஐ-பி3 கலர் கேமட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection) உடனான 6.78-இன்ச் 3டி கர்வ்டு 8டி எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 7+ Gen 3) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய சிப்செட்டை கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் கூட இதுவாகும். மேலும் இது 12ஜிபி வரை LPDDR5X ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.0 ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் அதன் பேக் பேனலில் டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் 32மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 6டி ஸ்மார்ட்போன் ஆனது 5500mAh பேட்டரியுடன் வருகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ( 120W fast charging) ஆதரிக்கிறது. ரியல்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 10 நிமிடங்களில் ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரியை 50 சதவிகிதம் சார்ஜ் செய்யும்.
ரிய்லமி நார்சோ என்61 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1600 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் 560 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (560 nits Peak Brightness) உடனான 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை (HD+ Display) கொண்டு உள்ளது.
ப்ராசஸர், ஸ்டோரேஜ் மற்றும் ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, ரியல்மி நார்சோ எம்61 ஸ்மார்ட்போன் ஆனது யுனிசாக் டி612 சிப்செட் (Unisoc T612 Chipset) மூலம் இயங்குகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 (Android 14) அடிப்படையிலான ரியல்மி யுஐ (Realme UI)உடன் வருகிறது.
கேமரா மற்றும் பேட்டரியை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிடப்படி, இது 32 எம்பி ப்ரைமரி கேமராவை (32MP Primary Camera) கொண்டுள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்பக்கத்தில் உள்ள 5 எம்பி செல்பீ கேமரா (5MP Selfie Camera) பார்த்துக்கொள்ளும். இது 10W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








