Home
Mobile

இதுதாண்டா போன்.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் போன்ற மூக்கில் விரல் வைக்கும்படியான பீச்சர்களுடன் ரியல்மி ஜிடி8 ப்ரோ ஆஸ்டன் மார்டின் எப்1 லிமிடெட் எடிஷன் (Realme GT8 Pro Aston Martin F1 Limited Edition) களமிறங்கி இருக்கிறது. இந்த லிமிடெட் எடிஷனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

ரியல்மி ஜிடி8 ப்ரோ ஸ்மார்ட்போன் போலவே கஸ்டமைஸ்டு மெக்கானிக்ல் அசம்பிள் கேமரா கேஸ் கொடுக்கிறது. ஆனால், ஆஸ்டன் மார்டின் காரை போலவே கிரீன் மற்றும் லெமன் தீம் பாடி கொடுக்கிறது. மெட்டாலிக் ஃபிரேம் கிடைக்கிறது. சில்வர் விங்க் லோகோ பேனலில் இடம்பெற்றுள்ளது. அதேபோல ஏரோடைனாமிக் கர்வ் டிசைனை பார்க்க முடிகிறது.

இதுதாண்டா போன்.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா!

ரியல்மி ஜிடி8 ப்ரோ ஆஸ்டன் மார்டின் அம்சங்கள் (Realme GT8 Pro Aston Martin Specifications): இந்த லிமிடெட் எடிஷன் மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிர்ஸ் கார்டு மட்டுமல்லாமல், ஆர்1 கிராபிக்ஸ் (R1 Graphics) கிடைக்கிறது.

ஆஸ்டன் மார்டினுக்கு ஏற்ப டிசைன் செய்யப்பட்ட ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.79 இன்ச் (1440 x 3136 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 2K+ ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.

கியூஎச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision), டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொடுக்கிறது. ரியல்மி ஜிடி8 ப்ரோ ஆஸ்டன் மார்டின் எப்1 லிமிடெட் எடிஷனில் 50 எம்பி ரிக்கோ ஜிஆர் ஆன்டி-கிளார் (Ricoh GR Anti-glare) மெயின் கேமரா கிடைக்கிறது. 2 ஆக்சிஸ் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது.

இதுதாண்டா போன்.. 7000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 200MP கேமரா!

50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த டெலிபோட்டோவில் ஆட்டோ போகஸ் (Auto Focus), 2 ஆக்சிஸ் ஓஐஎஸ் டெக்னாலஜி, 3X ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. மேலும், 120X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. நைட் சீன், ஜிஆர், ராவ் (RAW) போன்ற கேமரா மோட்கள் கிடைக்கின்றன. 8K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது.

32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கிறது. இதில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 50W வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த 7000mAh பேட்டரியானது, 3500mAh மற்றும் 3500mAh ஆக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8.2 எம்எம் தடிமன் மற்றும் 218 கிராம் எடை கொடுக்கிறது.

IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.67,909ஆக இருக்கிறது. இப்போது, சீன மார்கெட்டில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT8 Pro Aston Martin F1 Limited Edition With 50MP Camera Available For Purchase in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X