மொத்த மார்க்கெட்ல இதுதான்.. 100W சார்ஜிங்.. 7200mAh பேட்டரி.. 6 டிகிரி டிராப்.. 120FPS கேமிங்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்க்கெட்டிலும் முதல்முறையாக ஐஸ்சென்ஸ் கிராஃபீன் டெக்னாலஜி (IceSense Graphene Technology) கொண்ட மாடலாக ரியல்மி ஜிடி7 (Realme GT7) களமிறங்கியது. இதுபோக 7700எம்எம் வேப்பர் சேம்பர், 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 7200mAh பேட்டரி போன்ற பீச்சர்களையும் கொடுத்தது. சீன மார்கெட்டில் வெளியாகிய இந்த போன் இப்போது அதே பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது, என்னென்ன பீச்சர்கள் உறுதியாகி இருக்கிறது? இந்தியாவில் எப்போது வெளியாகிறது? விற்பனை எப்படி? உள்ளிட்ட விவரங்கள் இதோ.
ரியல்மி இந்தியா நிறுவனமானது, ஹீட் கன்ட்ரோலில் 6 டிகிரி செல்சியஸ் வரையில் டிராப் கொடுக்கும்படியான ஐஸ்சென்ஸ் கிராஃபீன் டெக்னாலஜியுடன் ரியல்மி ஜிடி7 போன் இங்கு வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது. இதற்கு முன்பாகவே ப்ரோ கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 120FPS கேமிங் அவுட்புட்டில் 6 மணி நேரங்கள் பிளேபேக்கை ரியல்மி ஜிடி7 கொடுக்கும் என்பதையும் உறுதி செய்திருந்தது.

அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதையும் உறுதி செய்திருந்தது. அதேபோல ஐஸ்சென்ஸ் பிளாக் (IceSense Black) மற்றும் ஐஸ்சென்ஸ் ப்ளூ (IceSense Blue) ஆகிய கலர்களிலும் அதிகாரப்பூர்வ டிசைனை வெளியிட்டுள்ளது. ஆனால், வெளியீட்டு தேதி மற்றும் விலை மற்றும் மற்ற பீச்சர்களை வெளியிடவில்லை. இருப்பினும், அடுத்தடுத்து பீச்சர்களை உறுதி செய்ய இருக்கிறது.
ஆனால், இந்த ரியல்மி ஜிடி7 போனானது, ஏற்கனவே சீன மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், அதன் பீச்சர்களே இதில் இடம்பெற வாய்ப்புள்ளதால் அதை இப்போது தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், இப்போது உறுதி செய்யப்பட்டுள்ள ஐஸ்சென்ஸ் கிராஃபீன் டெக்னாலஜி, 120FPS கேமிங் அவுட்புட் போன்ற பீச்சர்கள் சீன வேரியண்ட்டிலும் பேக் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி7 அம்சங்கள் (Realme GT7 Specifications): இந்த ரியல்மியில் ஐஸ்சென்ஸ் கிராஃபீன் டெக்னாலஜி மட்டுமல்லாமல், 7700எம்எம் வேப்பர் சேம்பர் மற்றும் 0.48எம்எம் பேக் கவர் கிடைக்கிறது. ஆகவே, ஹெவி கேமிங்கின்போதும், பேட்டரி ஹீட் மற்றும் கூலிங் ஹேண்டில் கிடைக்கும். 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2600Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், 120FPS அவுட்புட் கிடைக்கிறது.

அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் (Octa Core 3nm MediaTek Dimensity 9400+) சிப்செட் மற்றும் இம்மார்டலிஸ் ஜி 925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. பிரத்யேக கேமிங் பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) வருகிறது. லேட்டஸ்ட் போன்களை போல ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.
கிரிஸ்டல் ஆர்மர் கிளாஸ் (Crystal Armor Glass) புரொடெக்சன் கொண்ட 6.78 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே உள்ளது. இந்த பிளாட் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 340Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 100W ஃபிளாஷ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7200mAh டைட்டன் பேட்டரி கிடைக்கிறது. இதற்கு கூலிங் டெக்னாலஜிகள் உள்ளன.
சோனி ஐஎம்எக்ஸ்896 (Sony IMX896) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் பேசிக் வேரியண்ட்டாக இருக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.30,358 (சீன யுவான் அடிப்படையில்) ஆக இருக்கிறது. இதே பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








