Home
Mobile

இந்திய மார்கெட்ல உறுதி.. OLED டிஸ்பிளே.. 120FPS கேமிங்.. 100W பாஸ்ட் சார்ஜிங்.. 7200mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய கேமிங் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படியான அறிவிப்பை ரியல்மி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓஎல்இடி டிஸ்பிளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 7200mAh பேட்டரி மட்டுமல்லாமல், 120FPS கேமிங் அவுட்புட் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் களமிறங்கி சீன மார்கெட்டை மிரளவிட்ட ரியல்மி ஜிடி7 (Realme GT7) போனின் இந்திய வெளியீடு இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரியல்மி ஜிடி7 போனில் அப்படி என்ன இருக்கிறது?

பிரீமியம் கேமிங் மாடலாக சீன மார்கெட்டில் வெளியாகிய இந்த போனுக்கு உலகளவில் எதிர்பார்ப்பு எகிறியது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் பிரீமியம் பீச்சர்கள் கிடைத்ததால், இந்திய பிரியர்களுக்கும் பிடித்துப் போய்விட்டது. இருப்பினும், இங்கு வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், ரியல்மி இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அதை உறுதி செய்துவிட்டது.

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் 120FPS அவுட்புட் மட்டுமல்லாமல், அதோடு 6 மணி நேரங்கள் கேமிங்பிளே கொடுக்கும் மாடல்களாக ரியல்மி ஜிடி7 சீரிஸ் களமிறங்க இருப்பதாக அதனுடைய எக்ஸ் (X) தளத்தில் உறுதி செய்துள்ளது. இருப்பினும், தேதியை குறிப்பிடவில்லை. ஆனால், ஓரிரு வாரத்தில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த போனின் கேமிங் பீச்சர்கள் மட்டுமல்ல, டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்களும் பிரீமியமாகவே இருக்கின்றன. சீன வேரியண்ட்டில் இருக்கும் பீச்சர்களே பெரும்பாலும் இந்திய வேரியண்ட்டில் இருக்கும் என்பதால் அந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்வது நல்லது. ஆகவே, அதை பார்த்துவிடுவோம். கூடவே விலையையும் பார்ப்போம்.

இந்திய மார்கெட்ல உறுதி! OLED டிஸ்பிளே.. 120FPS கேமிங்.. 100W சார்ஜிங்!

ரியல்மி ஜிடி7 அம்சங்கள் (Realme GT7 Specifications): இந்த ரியல்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ (Octa Core 3nm MediaTek Dimensity 9400+) சிப்செட் கிடைக்கிறது. பிரீமியம் ஏஐ பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 6.0 கிடைக்கிறது. இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் உள்ளது.

கிரிஸ்டல் ஆர்மர் கிளாஸ் (Crystal Armor Glass) கொண்ட 6.78 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2600Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 1.5K ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கிடைக்கிறது.

இதுபோக 120FPS கேமிங் அவுட்புட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்896 சென்சாரும் அல்ட்ரா வைடு கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி08டி10 சென்சாரும் வருகிறது. சோனி ஐஎம்எக்ஸ்480 சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த ரியல்மி ஜிடி7 போனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7200mAh பேட்டரி வருகிறது. கேமிங் மாடலாக இருப்பதால், மதர் போர்டுக்கு சார்ஜ் செல்லும்படி ஃபைபாஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, பேட்டரி ஹீட் கன்ட்ரோல் கிடைக்கும். IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ரூ.30,358ஆக ஆரம்ப விலை இருக்கிறது.

இது சீன மார்கெட்டின் விலையாகும். இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்த சில நாட்களில் எந்த தேதியில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட இருக்கிறது. அதேபோல அமேசான் தளத்தில் இந்த ரியல்மி ஜிடி7 போனுக்கான மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அமேசானில் விற்பனைக்கு வருவது உறுதியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT7 With 6 Hours Stable 120FPS Gaming Confirmed To Launch India Soon Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X