Home
Mobile

மிரண்டு போவீங்க.. 7200mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஒரு ஸ்மார்ட்போனில் 7200mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மற்றும் IP69 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் வந்தால் மிரண்டு போகாமல் இருக்க முடியுமா என்ன? அப்படியான பீச்சர்களுடன் ரியல்மி ஜிடி7 (Realme GT7) போன் வெளியாகி இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், பைபாஸ் சார்ஜிங், 2600Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் போன்ற பிரீமியம் கேமிங் பீச்சர்களும் கிடைக்கின்றன.

கேமிங் மாடல், கேமரா மாடல், பேட்டரி மாடல் என்று ஸ்மார்ட்போன்களை எளிதாக பிரித்து பார்க்க முடியும். அதில் கொடுக்கும்படும் பீச்சர்களை வைத்து இதை தெரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த ரியல்மி ஜிடி7 போனானது ஆல் ஏரியாவிலும் கில்லி என்று சொல்லும்படி ஒட்டுமொத்தமாகவே பட்டையை கிளப்பி இருக்கிறது. டிஸ்பிளே பீச்சர்களில் இருந்து தொடங்கலாம்.

மிரண்டு போவீங்க.. 7200mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே!

ரியல்மி ஜிடி7 அம்சங்கள் (Realme GT7 Specifications): 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 4608Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக 2600Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.

இதுபோக குளோவ் டச், வெட் டச் மற்றும் ஆயிலி டச் சப்போர்ட் கிடைக்கிறது. கிரிஸ்டல் ஆர்மர் கிளாஸ் (Crystal Armor Glass) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் அல்ட்ரா பிரீமியம் அவுட்புட் மற்றும் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) மற்றும் இம்மார்டலிஸ் ஜி 925 ஜிபியு (Immortalis G925 GPU) வருகிறது.

மிரண்டு போவீங்க.. 7200mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே!

கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் டைமன்சிட்டி 9400பிளஸ் 3என்எம் (Octa Core Dimensity 9400+ 3nm) சிப்செட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் உள்ளன.

இந்த ரியல்மி ஜிடி7 போனில் 50 எம்பி மெயின் கேமரா (சோனி ஐஎம்எக்ஸ்896 சென்சார்) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (ஓம்னிவிஷன் ஓவி08டி10 சென்சார்) மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் (சோனி ஐஎம்எக்ஸ்480 சென்சார்) கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7200mAh பேட்டரி கிடைக்கிறது. ஃபைபாஸ் சார்ஜிங், பேட்டரி ஹெல்த் மானிட்டர், ஐஸ்-சென்சிங் கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது.

மேலும், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), அல்ட்ரா சோனிக் 3டி ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic 3D Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஜிடி பர்ஃபாமென்ஸ் என்ஜின் 2.0 (GT Performance Engine 2.0) கிடைக்கிறது. கிராஃபீன் ஐஸ் (ப்ளூ), கிராஃபீன் ஸ்னோவ் (ஒயிட்) கலர்கள் உள்ளது.

மேலும், கிராஃபீன் நைட் (பிளாக்) கலர் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,358ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,862ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,030ஆகவும் இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,534ஆகவும் உள்ளது.

மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் வேரியண்ட்டின் விலை ரூ.44,395ஆக இருக்கிறது. சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. மேற்கண்ட விலை விவரங்கள் சீனாவின் யுவான் அடிப்படையில் கொடுக்கப்பட்டவையாகும். ஆகவே, இதில் சிறிது மாற்றங்கள் இருக்கக் கூடும்.

Best Mobiles in India

English summary
Realme GT7 With 50MP Camera 16GB RAM Launched Sale From April 29 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X