24ஜிபி ரேம்.. 260W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் புத்தம் புதிய Realme 5ஜி போன் ரெடி.! என்ன மாடல்? எப்போது அறிமுகம்..
ரியல்மி நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கேமரா போன்ற பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது ரியல்மி நிறுவனம். இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதாவது ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி5 (realme GT5) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் உலக சந்தை மற்றும் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல் 240 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி5 போனின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதேபோல் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது 6.74-இன்ச் AMOLED டிஸ்பிளேவுடன் இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஒரு தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2) சிப்செட் உடன் அட்ரினோ 740ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன்.
ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி/24ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த நிறைய கேமிங் ஆப்ஸ்களை பயன்படுத்தலாம். பின்பு யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
50எம்பி பிரைமரி கேமரா (Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
4600 எம்ஏச் பேட்டரியுடன் இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த போன் ஒரு நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. பின்பு 240 வாட்ஸ் SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது.

குறிப்பாக realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, ஜபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி5 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் சற்று உயர்வான விலையில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








