Home
Mobile

மிரள விட்டுருச்சு.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. 24GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த மார்கெட்டும் மிரளும்படி சோனி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 24 ஜிபி ரேம், 1 டிபி மெமரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட ரியல்மி ஜிடி5 ப்ரோ (Realme GT5 Pro) போனின் டிசைன் வெளியாகி இருக்கிறது.

ரியல்மி ஜிடி5 ப்ரோ அம்சங்கள் (Realme GT5 Pro Specifications): இந்த போனில் 6.78 இன்ச் (2780×1264 pixels) ஓஎல்இடி (OLED) கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெப்ஃரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 2160Hz டச் சாம்பிளிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது.

மார்கெட் மிரளுது.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 24GB ரேம்.. எந்த போன்?

ஆகவே, டிஸ்பிளேவை பொறுத்தவரை அல்ட்ரா பிரீமியம் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல இந்த ரியல்மி போனின் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டமும் மிரட்டலாகவே இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவானது, சோனி எல்ஓய்டி808 (Sony LYT808) சென்சார் கொண்டிருக்கிறது.

அதோடு ஓம்னிவிஷன் ஓவி08டி10 (OmniVision OV08D10) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்890 (Snoy IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி டெலிபோட்டோ (Telephoto) கேமரா வருகிறது. இந்த டெலிபோட்டோவில் பெரிஸ்கோப் லென்ஸ் (Periscope Lens) கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு 3x ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 6x லாஸ்லெஸ் ஜூம் (Lossless Zoom) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரியல்மி ஜிடி5 ப்ரோ போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile ) சிப்செட் வருகிறது.

மார்கெட் மிரளுது.. SONY கேமரா.. 100W சார்ஜிங்.. 24GB ரேம்.. எந்த போன்?

அதோடு கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனின் பேக்கப் பொறுத்தவரையில், 100W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி வருகிறது. அதோடு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் நான்கு வேரியண்ட்களில் வெளியாகிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்கள் வருகின்றன. அதேபோல 24 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் இருக்கிறது. இந்த போன் பேட்டரியோடு சேர்ந்து, 220 கிராம் எடைக் கொண்டிருக்கிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் மற்றும் டைப்-சி ஆடியோ கொண்டிருக்கிறது. 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதோடு வை-பை 7, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

இந்த ரியல்மி ஜிடி5 ப்ரோ போன் ரெட் ராக் (Red Rock) மற்றும் ஸ்டார்ரி நைட் (Starry Night) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில் ரெட் ராக் வேரியண்ட் லெதர் பேக் பேனல் கொண்டிருக்கிறது. இந்த 2 வேரியண்ட்களின் அதிகார்பூர்வ போட்டோக்கள் வெளியாகி மார்கெட் வட்டாரங்களில் மிகப்பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

குறிப்பாக இது, ஒன்பிளஸ் 12 போன் போன்ற டிசைன் கொண்டிருப்பதால் இருப்பதால், கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இந்த போன் வரும் டிசம்பர் 7ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்பின் மற்ற நாடுகளில் வெளியாகும். இந்த போனின் ஆரம்ப விலை ரூ.40,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT5 Pro With 50MP Camera, 5400mAh Battery Launch on December 7 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X