Home
Mobile

இங்க நான்தான் கிங்கு.. ஒட்டுமொத்தமே பிரம்மாண்டம்.. மார்கெட்டை அதிரவைத்த GT5 Pro அறிமுகம்!

இதுவரையில் வெளியான ரியல்மி மாடல்களிலேயே மிரட்டலான பிரீமியம் அம்சங்களை கொண்ட ஒரே போனாக ரியல்மி ஜிடி5 ப்ரோ (Realme GT5 Pro) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சோனி கேமரா, 16ஜிபி ரேம், ஜென் 3 சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் என்று அதிரவைத்துள்ளது.

ரியல்மி ஜிடி5 ப்ரோ அம்சங்கள் (Realme GT5 Pro Specifications): இந்த ரியல்மி போனில் அதிவேக ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 Mobile) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு, ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமே பிரம்மாண்டம்.. மார்கெட்டை அதிரவைத்த GT5 Pro அறிமுகம்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டிருக்கிறது. இந்த மாடலில் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்ட 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி ஜிடி5 ப்ரோ போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 ஜிபி ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் மிரட்டலான சென்சார்கள் கொண்ட ரியர் கேமரா செட்டப் வருகிறது. Sony LYT-808 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு Sony IMX355 சென்சார் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

ஒட்டுமொத்தமே பிரம்மாண்டம்.. மார்கெட்டை அதிரவைத்த GT5 Pro அறிமுகம்!

அடுத்தபடியாக Sony IMX890 சென்சார் கொண்ட 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) மாடலாகும். இந்த கேமராவில் 3x ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) 6x இன்-சென்சார் ஜூம் (In-sensor zoom) மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

அதேபோல Sony IMX615 சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) வருகின்றன.

இந்த ரியல்மி போனில் டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனின் பேட்டரி சிஸ்டமும் மிரள வைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5400mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போன் நானோ லெதர் பினிஷிங் கொண்ட ரெட் மற்றும் வைட் கலரில் வருகிறது. அதோடு ஸ்டார் ஃபிளாஷ் ஏஜி கிளாஸ் பினிஷிங் கொண்ட பிளாக் கலரும் வருகிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.39,860ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.43,380ஆகவும் இருக்கிறது.

ஒட்டுமொத்தமே பிரம்மாண்டம்.. மார்கெட்டை அதிரவைத்த GT5 Pro அறிமுகம்!

அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலின் விலை ரூ.46,910ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.50,430ஆகவும் இருக்கிறது. சீனாவில் பிராம்மாண்ட அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 14ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஜனவரியில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT5 Pro With 16GB RAM, 50MP Camera Sale From December 14 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X