Home
Mobile

யோசிக்காம வாங்குவீங்க.. 3x ஆப்டிகல் ஜூம்.. 150W ஃபாஸ்ட் சார்ஜிங்.. தெறிக்கவிடும் Realme போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கம் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி ஜிடி 5 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதாவது வரும் வாரங்களில் ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது உலக சந்தை மற்றும் இந்தியச் சந்தையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 3x ஆப்டிகல் ஜூம் (3x optical zoom), பெரிய டிஸ்பிளே மற்றும் தனித்துவமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளன.

3x ஆப்டிகல் ஜூம்.. தெறிக்கவிடும் ரியல்மி போன்.. எந்த மாடல்?

அதன்படி ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.74-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (6.74-inch OLED display) வசதியுடன் வெளிவரும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144 Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் தரமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 chipset) வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 5 ப்ரோ போன் வெளிவரும். மேலும் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3x ஆப்டிகல் ஜூம்(3x optical zoom) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே தொலைவில் உள்ள ஒரு பொருளை கூட இந்த போனின் உதவியுடன் துல்லியமாக படம் பிடிக்க முடியும். மேலும் 64எம்பி பிரைமரி கேமரா (Sony IMX9) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

எனவே இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

3x ஆப்டிகல் ஜூம்.. தெறிக்கவிடும் ரியல்மி போன்.. எந்த மாடல்?

5200 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 150 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக சிறந்த பாஸ்ட் சார்ஜிங் வசதிக்குத் தகுந்தபடி சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதை விட இந்த ரியல்மி போனை நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT5 Pro Phone Coming Soon With 3x Optical Zoom, Snapdragon 8 Gen 3 SoC: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X