Realme கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ! 100W சார்ஜிங், 5,400mAh பேட்டரி, 50MP டெலிஃபோட்டோ கேமரா! என்ன மாடல்?
என்னது? 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் உடனான 5400mAh பேட்டரி, 50MP டெலிஃபோட்டோ கேமராவுடன் ட்ரிபிள் ரியர் கேமரா, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவா.. ரியல்மி நிறுவனத்திடமிருந்து இப்படியொரு ஸ்மார்ட்போனா? என்று வாய்பிளக்க வைக்கும் அம்சங்களுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போன், அறிமுகத்திற்கு தயாராக உள்ளது.
என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? நாம் இங்கே பேசுவது ரியல்மி ஜிடி5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ரியல்மி ஜிடி 5 சீரீஸின் கீழ் வரும் இந்த ப்ரோ மாடலானது இந்த நவம்பர் மாதத்திலேயே அறிமுகமாகும் என்று ரியல்மி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ரியல்மி நிறுவனம் தனது ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் கூட இது நவம்பர் 23 ஆம் தேதியன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இது ஹானர் 100 சீரிஸ் (Honor 100 Series) மற்றும் நுபியா ரெட் மேஜிக் 9 ப்ரோ (Nubia Red Magic 9 Pro) அறிமுகமாகும் அதே தேதியில் வெளியாகும்.
மேலும் ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டால், இது ஷாவ்மீ 14 சீரீஸ் (Xiaomi 14 Series) மற்றும் ஐக்யூ 12 சீரீஸ் (iQOO 12 Series) உடன் நேரடியாக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவின் கூற்றுப்படி, ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ( 3000nits peak brightness) உடனான 6.78-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளேவை (1.5K OLED Display) கொண்டிருக்கலாம்.
முன்னரே குறிப்பிட்டபடி, இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) மூலம் இயக்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1டிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜை வழங்கலாம்.

பெரும்பாலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான ரியல்மி நிறுவனத்தின் கஸ்டம் ஸ்கின் (Custom skin) மூலம் இயங்கக்கூடும். மேலும் 100வாட்ஸ் வயர்டு (100W Wired) மற்றும் 50வாட்ஸ் வயர்லெஸ் (50W Wireless) சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5400mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple rear camera setup) இடம்பெறலாம். அதில் 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ராவைட் கேமரா + 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா (Telephoto Camera) இடம்பெறலாம். முன்பக்கத்தில், 32எம்பி செல்பீ கேமரா இருக்கலாம்.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதில் வைஃபை 7, ப்ளூடூத் 5.4 மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவற்றை கொண்டிருக்கலாம். செக்யூரிட்டியை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனின் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் (In-screen fingerprint reader) இருக்கும் என்று கூறப்படுகிறது.
என்ன விலைக்கு அறிமுகமாகும்? அம்சங்களின் அடிப்படையில், ரியல்மி ஜிடி5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தையில் ரூ.50,000-ஐ சுற்றிய விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது. வழக்கம் போல இந்த ஸ்மார்ட்போன் முதலில் இது சீன சந்தையில் தான் அறிமுகமாகும்; அதன் பின்னரே இந்திய சந்தைக்கு வரும்; இந்திய அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.
நினைவூட்டும் வண்ணம், தற்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஒரே ஒரு ரியல்மி ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன் என்றால், அது ரியல்மி ஜிடி நியோ 3 மாடல் தான். இந்தியாவில் இது 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில், முறையே ரூ.36,999 க்கும், ரூ.38,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








