Home
Mobile

10 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் ஆகும் Realme 5ஜி போன்: இந்தியாவுக்கு வருகிறது.! முழு விவரம்.!

ரியல்மி நிறுவனம் விரைவில் இந்தியாவில் ரியல்மி ஜிடி 3 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த போனின் மாடல் நம்பர் RMX3709 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 10 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் ஆகும் Realme 5ஜி போன்.!

குறிப்பாக ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் 50எம்பி Sony IMX890 கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த புதிய போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் தரமான பேட்டரி அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

 10 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் ஆகும் Realme 5ஜி போன்.!

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் 4600 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த புதிய ரியல்மி ஜிடி 3 போன் 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 10 நிமிடங்களில் இந்த போனை முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். அதாவது இந்த ரியல்மி ஜிடி 3 போன் 10 நிமிடங்களில் 100 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆதரவுடன் சிறந்த பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 5ஜி, வைஃபை,புளூடூத், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்-டிஸ்பிளே கைரேகை ஸகேனர் மற்றும் சிறந்த ஆடியோ வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும்.

 10 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் ஆகும் Realme 5ஜி போன்.!

குறிப்பாக பாஸ்ட் சார்ஜிங், அட்டகாசமான கேமரா, பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரியல்மி ஜிடி 3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT3 phone with 240W fast charging facility will be launched in India soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X