அள்ளுவிடும் மார்கெட்.. பட்ஜெட்ல 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. SONY கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
சோனி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் ரியல்மி ஜிடி நியோ6 (Realme GT Neo6) போன் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ரியல்மி ஜிடி நியோ6 அம்சங்கள் (Realme GT Neo6 Specifications): இந்த ரியல்மியில் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே வருகிறது. 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் கொண்டிருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் வருகிறது. இதுவொரு ப்ரோ-எக்ஸ்டிஆர் டிஸ்பிளே (Pro-XDR Display) மாடலாகும். இந்த ஜிடி மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப் வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் ரியல்மி யுஐ 5 (realme UI 5) வருகிறது. மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கார்டு வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் வெளியாகி இருக்கிறது. இந்த ரியல்மி ஜிடி நியோ6 போனில் பிரீமியம் சென்சார்கள் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் வருகிறது. அதோடு அல்ட்ரா வைடு கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் வருகிறது. அதேபோல சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சார் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டுள்ளது.
இந்த பிரீமியம் கேமராவை போலவே, அல்ட்ரா பிரீமியமாக பேட்டரி சிஸ்டம் வருகிறது. 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging) கொண்டிருக்கிறது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சப்போர்ட் உடன் 5500mAh பேட்டரி வருகிறது. ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் டால்பி அட்மோஸ் கொண்டிருக்கிறது.
இந்த ரியல்மி ஜிடி நியோ6 போனில் IP65 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது. பர்பிள், கிரீன் மற்றும் சில்வர் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 12 ஜிபி + 256 மெமரி மாடலின் விலை ரூ.24,730ஆகவும், 16 ஜிபி + 256 மெமரி மாடலின் விலை ரூ.27,725ஆகவும் இருக்கிறது.
16 ஜிபி + 512 ஜிபி மாடலின் விலை ரூ.31,190ஆகவும், 16 ஜிபி + 1 டிபி மாடலின் விலை ரூ.34,660ஆகவும் இருக்கிறது. இப்போது, சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மே 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்திய மார்கெட்டில் விரைவில் வெளியாக இருக்கிறது. இங்கும் இதே பட்ஜெட்டில் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








