கண்மூடி திறக்கும் வேளையில் இவ்வளவு சார்ஜ் ஆகுதா? பட்டைய கிளப்பும் Realme-யின் புதிய 5ஜி போன்.!

|

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். அதேசமயம் ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.

ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன்

ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன்

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ5 எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய போன் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்த விஷயம் தெரிஞ்சதும்.. உங்க iPhone-க்கு பின்னாடி உள்ள Apple லோகோவை உடனே சுரண்டி பார்ப்பீங்க!இந்த விஷயம் தெரிஞ்சதும்.. உங்க iPhone-க்கு பின்னாடி உள்ள Apple லோகோவை உடனே சுரண்டி பார்ப்பீங்க!

4600 எம்ஏஎச் பேட்டரி

4600 எம்ஏஎச் பேட்டரி

இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி,ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் ஆனது டூயல்-செல் 4600 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் நீண்ட நேர பேட்டரி பேக்கப் இதில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சுருக்கமாகச் சொன்னால் கண்மூடி திறக்கும் நேரத்தில் ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிவிடும் போலத் தான் தெரிகிறது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.8000 விலையில் இப்படி ஒரு Vivo போன் கிடைக்கும் போது 30,000-திற்கு போன் எதற்கு? யோசிக்காம வாங்குங்க.!ரூ.8000 விலையில் இப்படி ஒரு Vivo போன் கிடைக்கும் போது 30,000-திற்கு போன் எதற்கு? யோசிக்காம வாங்குங்க.!

 AMOLED டிஸ்பிளே

AMOLED டிஸ்பிளே

ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு இந்த போன் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

என்னது.. வெறும் ரூ.11,999 தானா? மொபைல் மார்க்கெட்டில் சலசலப்பை கிளப்பும் புது 5G போன்! நம்பி வாங்கலாமா?என்னது.. வெறும் ரூ.11,999 தானா? மொபைல் மார்க்கெட்டில் சலசலப்பை கிளப்பும் புது 5G போன்! நம்பி வாங்கலாமா?

Dimensity 9-series பிராசஸர்

Dimensity 9-series பிராசஸர்

ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் Dimensity 9-series பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது சிறந்த செயல்திறன் கொடுக்கும் ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி கிரகத்திற்கு அருகே ஜூம் செய்த போது.. விஞ்ஞானிகளுக்கு தெரிந்த வினோத தோற்றம்! அச்சு அசலா அப்படியே இருக்கு!சனி கிரகத்திற்கு அருகே ஜூம் செய்த போது.. விஞ்ஞானிகளுக்கு தெரிந்த வினோத தோற்றம்! அச்சு அசலா அப்படியே இருக்கு!

 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

விரைவில் அறிமுகமாகும் இந்த ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்தியாவுக்கு நன்றி சொன்ன கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை: கிடைத்தது மிகவும் உயரிய விருது.!இந்தியாவுக்கு நன்றி சொன்ன கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை: கிடைத்தது மிகவும் உயரிய விருது.!

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்

ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-ல் வந்த போட்டோ-வீடியோ டெலீட் ஆகிடுச்சா.! இனி இப்படி செஞ்சா உடனே ரிட்டர்ன் வந்துடும்.!WhatsApp-ல் வந்த போட்டோ-வீடியோ டெலீட் ஆகிடுச்சா.! இனி இப்படி செஞ்சா உடனே ரிட்டர்ன் வந்துடும்.!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

அதேபோல் ரியல்மி ஜிடி நியோ5 ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. குறிப்பாக இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Realme GT Neo5 smartphone to launch in India soon with 240W fast charging support: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X