Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன்.!

சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்த தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ரியல்மி இந்தியா மற்றும்
ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி Madhav Sheth தனது ட்விட்டர் பக்கத்தில், ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் இந்திய வருகையை உறுதி செய்தார்.

அதாவது அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் மாதம் தொடக்கத்தில் இந்த சாதனம் இந்தியாவில் விற்பனைக்கு வரும்எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 2 சாதனம் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் சாம்சங் இ4 டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 + ஆதரவு, 600 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போனில் மிகவும்எதிபார்த்த

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும்எதிபார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும்

ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனின்

ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனில் 5000

ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Neo Green, Pale Blue, மற்றும் Shadow Black நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 2 விலை

ரியல்மி ஜிடி நியோ 2 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,499(இந்திய மதிப்பில் ரூ.28,500)-ஆக உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.30,800)-ஆக உள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.34,200)-ஆகஉள்ளது.

குறிப்பாக இந்த புதிய சாதனம் அதிநவீன அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். ஆனாலும் இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo2 smartphone to launch in India soon!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X