Home
Mobile

ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதயுடன் விரைவில் வெளிவரும் ரியல்மி ஜிடி நியோ 2.!

சமீபத்தில் ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 5ஜி மற்றும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வானவிலையில் தரமான அம்சங்களுடன் வெளிவந்தது என்றுதான் கூறவேண்டும்.

ரியல்மி நிறுவனம்

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 2 எனும் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 2 அசத்தலான
வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 ரியல்மி ஜிடி நியோ 2

வெளிவந்த தகவலின்படி, ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,000 அல்லது ரூ.35,000-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ரியல்மி ஜிடி நியோ 2 சாதனம் மற்ற ரியல்மி ஸ்மார்ட்போன்களை விட கூடுதல் அம்சங்களுடன் வெளிவரும்.

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனில் 3.18ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ள
சிப்செட் வசதியானது சிறந்த வேகம் மற்றும் செயல்திறனை கொண்டவை ஆகும். அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் மாடல் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள்
மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின்

அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம் டெப்த் லென்ஸ் என மொத்தம் மூன்றுகேமராக்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன்

குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதுதவிர 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, கைரேகை சென்சார், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
போன்ற சிறப்பான அம்சங்களுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ,டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன். ரியல்மி நிறுவனம் இதற்குமுன்பு இந்தியாவில் அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச்

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது ரியல்மி ஜிடி 5ஜி. இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ரியல்மி ஜிடி 5ஜி சாதனம் வெளிவந்துள்ளது.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம்

இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறுஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன். ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வீடியோகேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சாதனம் மிகவும் அருமையாக பயன்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo2 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X