செம்ம ஸ்டைலா, கெத்தா ரியல்மி GT நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

|

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக மீடியாடெக் Dimensity 1200 6nm SoC பிராசஸர் உடன் வந்த முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் தான். விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்ம ஸ்டைலா, கெத்தா ரியல்மி GT நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120:9 என்ற திரைவிகிதம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்..

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். குறிப்பாக பேண்டஸி, சில்வர், பிளாக் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

செம்ம ஸ்டைலா, கெத்தா ரியல்மி GT நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200 SoC பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி நியோ சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி Sony IMX682 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு உள்ளது.

ரியல்மி ஜிடி நியோ சாதனத்தில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரைவைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே 16 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

செம்ம ஸ்டைலா, கெத்தா ரியல்மி GT நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

இரட்டை சிம் 5ஜி, வைஃபை 6 802.11 ax, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன். பின்பு டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி ஜிடி நியோ விலை
இந்திய மதிப்பில்..
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,145-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,390-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,750-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X