வெயிட்டிங் ஓவர்.. ஏப்.11-இல் வருகிறது ரியல்மி 5ஜி போன்.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை ஒருவழியாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப்செட், 16ஜிபி ரேம், ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவர உள்ளது.
இந்த ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் 11-ம் தேதியை அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வேறு பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ அம்சங்கள்(realme GT Neo6 SE specifications): சக்திவாய்ந்த ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Snapdragon 7+ Gen 3) சிப்செட் உடன் ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.
அதேபோல் 10014mm² லார்ஜ் விசி கூலிங் (10014mm² large VC cooling) தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.
1.5கே 8டி எல்டிபிஒ ஒஎல்இடி (1.5K 8T LTPO OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா விக்டஸ் 2, 6000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும்.
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு இந்த போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, வைஃபை, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி நியோ6 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications