Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. 24ஜிபி ரேம்.. OLED டிஸ்பிளே.. 5500mAh பேட்டரி.. எந்த போன்?

ரியல்மி பட்டைய கிளப்பும் டிசைன் மறறும் தரமான மென்பொருள் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ மாடல் ஆனது முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு உலக சந்தை மற்றும் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது இந்த போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதிர போகுது மார்க்கெட்.. 24ஜிபி ரேம்.. OLED டிஸ்பிளே.. எந்த போன்?

ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ அம்சங்கள் (Realme GT Neo 6 SE specifications):120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5கே ரெசல்யூஷன் கொண்ட ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ போன் அறிமுகமாகும். பின்பு 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 + ஜென் 3 சிப்செட் ( Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) வசதியுடன் ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போன் 24ஜிபி ரேம் மற்றும் 1டிபி மெமரி வசதியுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

5500எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இந்த பேட்ரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும்.

அதிர போகுது மார்க்கெட்.. 24ஜிபி ரேம்.. OLED டிஸ்பிளே.. எந்த போன்?

ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போனின் கேமரா குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த போன் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ போன் அறிமுகமாகும்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் மாதம் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி நியோ 6 எஸ்இ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT Neo 6 SE specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X