Home
Mobile

இதுதான் Realme ஜிடி நியோ 6 போன்..இணையத்தில் வெளியாகிய படங்கள்! வேற லெவல்ல இருக்கு.. எப்போது அறிமுகம்?

ரியல்மி நிறுவனம் தனித்துவமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களைக் கொண்ட போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது ட்ரிபிள் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே எனப் பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

இதுதான் Realme ஜிடி நியோ 6 போன்..இணையத்தில் வெளியாகிய படங்கள்!

ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போன் ஆனது மெலிதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த போனின் பின்புறம் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.74 இன்ச் பிளாட் ஓஎல்டி (OLED) டிஸ்பிளேவுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K+ ரெசல்யூசன் (Resolution) அம்சங்கள் உள்ளன. இதுதவிர எச்டிஆர் பிளஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

இதுதான் Realme ஜிடி நியோ 6 போன்..இணையத்தில் வெளியாகிய படங்கள்!

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset) வசதியுடன் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன்.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராவுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் 16எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ரியல்மி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனில் பல கேமரா அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

16 ஜிபி ரேம் உடன் 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் அறிமுகமாகும் இந்த ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங், வீடியோ எடிட்டிங் போன்ற பயன்களுக்கு இந்த போன் மிகவும் அருமையாக உதவும். குறிப்பாக இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் Realme ஜிடி நியோ 6 போன்..இணையத்தில் வெளியாகிய படங்கள்!

குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனில் 100வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். பின்பு இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo courtesy:@ONLEAKS x @MYSMARTPRICE

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT Neo 6 design, specifications leaked online: check details here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X