Home
Mobile

பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா? ஒன்பிளஸ் 11 போனுக்கு டப் கொடுக்கும் 240W பாஸ்ட் சார்ஜ் கொண்ட Realme போன்.!

அடுத்த மாதம் துவக்கத்தில் iQOO 11 5G மற்றும் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில் ரியல்மி நிறுவனமும் அடுத்த மாதம் துவக்கத்தில் ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

ஜனவரி 5-ம் தேதி..

ஜனவரி 5-ம் தேதி..

அதாவது வரும் ஜனவரி 5-ம் தேதி ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்பின்பு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இந்த போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ரியல்மி போன் iQOO 11 5G மற்றும் ஒன்பிளஸ் 11 போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும். மேலும் ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் சிறந்த வடிவமைப்புடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

4600 எம்ஏஎச் பேட்டரி

4600 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்.

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன். பின்பு 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ரியல்மி போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 5 to launch on January 5 with 240W fast charging: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X