Home
Mobile

ஆட்டநாயகன் வந்துட்டாரு.. 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு Realme GT Neo 5! மாட்டுனதும் கழட்டிரலாம்!

Realme நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. Realme GT Neo 3 இன் வாரிசாக Realme GT Neo 5 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனானது 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Realme GT Neo 5

Realme GT Neo 5

Realme GT Neo 5 ஆனது 240W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் சீனாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது இந்த போன் சீன சான்றிதழ் தளமான TENAA இல் தோன்றியுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 3 இன் வாரிசாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

4,850mAh பேட்டரி ஆதரவு

4,850mAh பேட்டரி ஆதரவு

GSMArena மூலமாக இந்த ஸ்மார்ட்போன் டீனா சான்றிதழ் தளத்தில் தோன்றியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. RMX3706 என்ற மாதிரி எண் உடன் தோன்றி இருக்கிறது. இதில் 2425mAh திறன் கொண்ட இரண்டு செல்களும், 2,225mAh திறன் கொண்ட இரண்டு செல்களும் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 4,850mAh பேட்டரி இருக்கும் என கூறப்படுகிறது.

6.74-இன்ச் AMOLED டிஸ்ப்ளே

6.74-இன்ச் AMOLED டிஸ்ப்ளே

ஸ்மார்ட்போனில் 2,772x1,240-பிக்சல் தீர்மானம் கொண்ட 6.74-இன்ச் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என்றும் ஆக்டோ கோர் செயலி மூலம் இது இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் Realme GT Neo 5 ஆனது குவால்காம் இன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படும் என வதந்தி தகவல் கூறுகிறது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

அதேபோல் புதிய ரியல்மி போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கலாம் என்றும் இதில் ஒன்று OIS ஆதரவுடன் கூடிய 50 எம்பி முதன்மை கேமரா சென்சாரைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா சென்சார் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

240 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு

240 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு

TENAA சான்றிதழ் தளம் சார்ஜ் செய்யும் நேரம் குறித்த தகவலை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் 240 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகிறது. இதுவரை வெளியான போன்களில் ஐக்யூ 10 ப்ரோவில் மட்டும் தான் 200 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. இதன் மூலம் 5000 எம்ஏஎச் பேட்டரியை 10 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இதை வைத்து பார்க்கும் போது 240 வாட்ஸ் சார்ஜர் மூலம் ஸ்மார்ட்போனை 10 நிமிடத்திற்குள் சார்ஜ் செய்யலாம்.

1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதி

1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதி

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். இந்த போன் சிறந்த வடிவமைப்புடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நேரம் பேட்டரி பேக்கப்

நீண்ட நேரம் பேட்டரி பேக்கப்

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட்

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT Neo 5 Specs Leaked Ahead of Launch: 240W Ultra Fast Charging, Android 13 and More!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X