Just In
- 4 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 8 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 22 hrs ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 22 hrs ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
Don't Miss
- News
செல்ஃபி புள்ளை! மலை பூங்காவின் "கேமராவை" தூக்கிய கரடி.. ஒன்னு ரெண்டு இல்ல 400 போட்டோ எடுத்து அசத்தல்
- Movies
சூப்பர் ஸ்டாருடன் மாஸ் கூட்டணி... போக்கிரி ஸ்டைலில் கம்பேக் கொடுக்கும் பிரபுதேவா
- Finance
மாதம் 8000 சம்பளம் வாங்கியவர், தினமும் 6 கோடி சம்பாதிக்கிறார்.. யார் இந்த நிதின்..!
- Sports
கே.எல்.ராகுலை தொடர்ந்து அக்ஷர் பட்டேல்.. சைலண்ட்டாக நடந்து வரும் திருமணம்.. யார்? யார்? பங்கேற்பு
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மின்னல் வேக சார்ஜிங்: அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் Realme.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் சிறந்த வடிவமைப்புடன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் 4600 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 240 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் சிறந்த செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும். எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன். பின்பு 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ரியல்மி போன் அறிமுகமாகும். அதேபோல் இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் ஆனது வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த போன்3.5எம்எம் ஹெட்போன் ஜாக் ஆதரவுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 5 ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்னும் சில வாரங்களில் இந்த புதிய போன் இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470