வந்துட்டான்.. வந்துட்டான்.. 100W சார்ஜிங் சப்போர்ட்டை வழங்கும் முதல் மிட்-ரேன்ஜ் போன்.. கலக்கும் Realme!
கிடைக்குற கேப்புல எல்லாம் ஆப்பு வைப்பதில், சீன நிறுவனமான ரியல்மியை (Realme) ஒரு பெரிய கில்லாடி என்றே கூறலாம். ரூ.8,000 க்குள் இருந்தாலும் சரி அல்லது ரூ.50,000 க்கு மேல் இருந்தாலும் சரி.. எந்தவொரு பட்ஜெட்டிலும் வாங்க கிடைக்கும் பெஸ்ட் போன்களின் பட்டியலில் நிச்சயம் ஒரு ரியல்மி போன் இருக்கும்!
அந்த அளவிற்கு ஒவ்வொரு விலைப்பிரிவின் கீழும், விலையை மீறிய சில சிறப்பான அம்சங்களை தனது ஸ்மார்ட்போன்களில் சேர்ப்பதன் மூலம் பெரும்பாலான இந்தியர்களின் நம்பிக்கைக்கு உரிய சீன பிராண்ட் ஆக ரியல்மி உருமாறியுள்ளது. அந்த வரிசையில் இன்னொரு ரியல்மி போன் சேரவுள்ளது!

நாம் இங்கே பேசுவது ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ (Realme GT Neo 5 SE) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் முதல் மிட்-ரேன்ஜ் போனாக இருக்கும். அதாவது இது ரூ.25,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் முதல் 100W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் ரியல்மி போனாக இருக்கும்.
இந்த ரியல்மி போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவை தவிர்த்து ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 2 ப்ராசஸர் (Qualcomm Snapdragon 7+ Gen 2 SoC) உடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இது 1240 x 2772 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங், 1100 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகியவற்றை கொண்ட 6.74-இன்ச் பிளாட் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனானது 5500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி வரையிலான ரேம் (8GB RAM) மற்றும் , ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் போன்ற அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.
ரியல்மி தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சமீபத்தில் ரியல்மி சி55 (Realme C55) என்கிற பட்ஜெட் விலை போன் இந்தியாவில் அறிமுகமானது. இதுவும் கூட "முதல முறையாக" ஒரு அம்சத்தை கொண்டுவரும் ஸ்மார்ட்போனாக உள்ளது. இது மினி கேப்சூல் (Mini Capsule) என்கிற அம்சத்துடன் வரும் முதல் ஆண்ட்ராய்டு போனாகும்.
மினி கேப்சூல் என்பது லேட்டஸ்ட் ஐபோன்களில் உள்ள டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்தை போன்றது. அதாவது நேரம், பேட்டரி லெவல் போன்ற விவரங்களை டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் காட்சிப்படுத்தும் ஒரு அம்சமாகும். ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அவைகள் 4ஜிபி ரேம் + 64ஜிபி, 6ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் +128ஜிபி ஆகும். இவைகள் முறையே ரூ.10,999, ரூ.11,999 மற்றும் ரூ.13999 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 28 முதல் ரியல்மி.காம் (Realme.com) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications








