64எம்பி ரியர் கேமரா, 100W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் புதிய ரியல்மி 5ஜி போன்.!
ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே, தரமான கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ அம்சங்கள்
இந்த ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.74-இன்ச் OLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு 2772x1240 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போன் அண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு அறிமுகமாகும்.

இந்த ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போன் 64எம்பிப பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
புதிய ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஆனது 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும்.
ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல் போன். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

கனெக்டிவிட்டி
குறிப்பாக இந்த புதிய போனில் 5ஜி, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த ரியல்மி ஜிடி நியோ 5 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
அதேபோல் ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு பல அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக விவோ, மோட்டோ நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகிறது ரியல்மி. அதேபோல் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








