Home
Mobile

மின்னல் வேகம்.. சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் Realme 5ஜி போன்.!

பல முன்னணி செல்போன் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது ரியல்மி நிறுவனம். குறிப்பாக ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மேம்பட்ட மென்பொருள் வசதி மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் களமிறங்கும் Realme 5ஜி போன்.!

அதாவது ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.74-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ரியல்மி போன் வெளிவரும்.

12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 150 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு இந்த புதிய போன் அறிமுகமாகும். எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, ரியல்மி ஜிடி நியோ 5 ப்ரோ ஆனது சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT Neo 5 Pro Phone with 150W Fast Charging to Launch in India Soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X