Home
Mobile

இப்படியொரு போனுக்காக தான் வெயிட்டிங்: தரமான சிப்செட் உடன் ரியல்மி ஜிடி நியோ 3டி அறிமுகம்.!

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மாரட்போனை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இ4 AMOLED டிஸ்பிளே

இ4 AMOLED டிஸ்பிளே

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இ4 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே வசதி அருமையாக உள்ளது. இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த சாதனத்தில் கேமிங் வசதிக்கு தகுந்தபடி சிப்செட் வசதி உள்ளது. அதாவது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன். இப்போது சில ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த வகை சிப்செட் வசதிஉள்ளது. மேலும் Realme UI 3.0 OS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

64எம்பி பிரைமரி சென்சார்

64எம்பி பிரைமரி சென்சார்

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக்கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர அட்டகாசமான கேமரா அம்சங்கள், எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மாரட்போன்.

128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. டேஷ் எல்லோ, டிரிஃப்டிங் ஒயிட் மற்றும் ஷேட் பிளாக் நிறங்களில் இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்றவை இதில் உள்ள கூடுதல் சிறப்பு.

 இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 194.5 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தில் Dolby Atmos ஆதரவுடன் ஸ்டீரியோ
ஸ்பீக்கர் அமைப்பு உள்ளது. ஆனால் இதில் 3.5mm ஆடியோ ஜாக் இல்லை.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் விலை €469.99 (இந்திய மதிப்பில் ரூ.39,000) ஆக உள்ளது.பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை €509.99 (இந்திய மதிப்பில் ரூ.42,300) ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 3T with 120Hz AMOLED display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X