அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க: வேற லெவல் அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் Realme GT Neo 3T.!
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

எப்போது அறிமுகம்
இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல் இந்த போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

அதேபோல் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது டேஷ் எல்லோ, டிரிஃப்டிங் ஒயிட், ஷேட் பிளாக் நிறங்களில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

பெரிய டிஸ்பிளே
புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவரும்.
பின்பு 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.

கேமிங் சிப்செட்
கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து கேமிங் ஆப்ஸ்களையும் இதில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்
Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன்.

அருமையான கேமரா வசதி
விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த்கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.
அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட்போன்.

தரமான பேட்டரி
புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் இந்த ரியல்மி ஸ்மார்ட்போன்.

கனெக்டிவிட்டி
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தபுதிய ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 194.5 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ வசதி
குறிப்பாக இந்த புதிய ரியல்மி போனில் Dolby Atmos ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு உள்ளது. எனவே இது சிறந்த ஆடியோஅனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன விலை?
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ரூ.40,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications