Oneplus, Vivo, Nothingக்கு போட்டியாக களமிறங்கும் Realme- ஸ்மார்ட்போன்னா இப்படி இருக்கனும்!

|

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனானது இந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கத்திய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவது ரியல்மி சிஇஓ மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரியல்மி நிறுவனத்தின் ப்ரீமியம் விலைப் பிரிவு ஸ்மார்ட்போனாகும். புதிய ரியல்மி ப்ரீமியம் ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம்.

இந்திய அறிமுகம் உறுதி

ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், யூடியூப் வீடியோ மூலம் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தினார்.

அதேபோல் Realme 9i 5G வெளியீட்டு நிகழ்வில் Realme GT Neo 3T இந்திய அறிமுகம் உறுதி செய்யப்பட்டது. அறிமுக தேதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ 3டி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரியல்மி ஜிடி நியோ 3டி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனானது 120Hz AMOLED டிஸ்ப்ளே உடன் 64 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

Realme 9i 5G ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ரியல்மி ஜிடி நியோ 3டி இந்திய அறிமுகம் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டது.

Realme CEO மாதவ் ஷெத் சொன்ன தகவல்

Realme CEO மாதவ் ஷெத் சொன்ன தகவல்

இந்த மாத தொடக்கத்தில் Realme CEO மாதவ் ஷெத், யூடியூப்பில் Ask Madhav எனப்படும் யூடியூப் எபிசோடில் சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது Realme GT Neo 3T இன் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தினார். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என்றும் Realme GT Neo 3T வெளியீட்டு விவரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் எனவும் மாதவ் ஷெத் குறிப்பிட்டார்.

Nothing, Vivo, OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு போட்டி

Nothing, Vivo, OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு போட்டி

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனானது ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் $469.99 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.36,600 ஆகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இது சமீபத்தில் அறிமுகமான Nothing Phone (1), Vivo V25 Pro 5G, OnePlus Nord 2T 5G ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலையை விட சற்று அதிகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme GT Neo 3T சிறப்பம்சங்கள்

Realme GT Neo 3T சிறப்பம்சங்கள்

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடு உலகளாவிய மாறுபாட்டிற்கு ஒத்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகவே குறிப்பிட்ட நாட்டு சந்தைகளில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஏரத்தாள முடிவு செய்யப்பட்டு விட்டது.

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கும். இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது டேஷ் எல்லோ, ட்ரிஃப்டிங் ஒயிட், ஷேட் பிளாக் என மூன்று வண்ண விருப்பங்களில் வெளியாகலாம்.

ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே

ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே வசதியை அடிப்படையாக கொண்டிருக்கும்.

இந்த டிஸ்ப்ளே ஆனது 1080 பிக்சல்ஸ் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

கேமிங் விளையாடுவதற்கு இந்த ஸ்மார்ட்போன் சௌகரியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்த ஸ்மார்ட்போனில் மேம்பட்ட Qualcomm Snapdragon 870 SoC சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.

64 எம்பி பிரைமரி கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா

64 எம்பி பிரைமரி கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா

ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் அடிப்படையாகக் கொண்டு Realme UI 3.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இதே அம்சங்களுடன் இந்தியாவிலும் வெளியாகும் பட்சத்தில் இது ப்ரீமியம் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களுக்கு இடையே பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 3T Launched in Western Markets: Now, Premium Smartphone Teased in India!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X