செப்டம்பர் 16க்குள் பணத்த ரெடி பண்ணுங்க.. 80W சார்ஜிங் உடன் Realme GT Neo 3T!

|

Realme நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதம் GT Neo 3T ஸ்மார்ட்போனை உலகளவில் அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை உலகளவில் ஒவ்வொரு நாடாக அடுத்தடுத்து அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 16 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு இந்தியாவில் வெளியிடப்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 16 அறிமுகமாகும் Realme GT Neo 3T

செப்டம்பர் 16 அறிமுகமாகும் Realme GT Neo 3T

சமீபத்தில் நிறுவனம் இந்திய வெளியீட்டுக்கான ஒரு பிரத்யேக லேண்டிங் பக்கத்தை டீஸ் செய்தது. இதன்மூலம் ரியல்மி தரப்பில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் விரைவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் ரியல்மி ஜிடி நியோ 3டி தான் எனவும் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்டில் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 870 SoC சிப்செட் வசதி

தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 870 SoC மூலம் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் செஸ் போர்ட் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

Realme GT Neo 3T அறிவிப்புகள்

Realme GT Neo 3T அறிவிப்புகள்

ரியல்மி பக்கத்தின் லேண்டிங் பக்கத்தில் புதிய ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பைப் பெறும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் கூடுதல் அம்சங்கள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே குறித்த விவரத்தை நிறுவனம் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் தேதி கூலிங் சிஸ்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கேமரா குறித்த அறிவிப்புகள் செப்டம்பர் 13 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Realme GT Neo 3T சிறப்பம்சங்கள்

Realme GT Neo 3T சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகமான காரணத்தால், இதன் அம்சங்கள் ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது.

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இ4 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளியானது.

குறிப்பாக இதன் டிஸ்ப்ளே வசதி அருமையாக உள்ளது. இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவு

இந்த சாதனத்தில் கேமிங் வசதிக்கு தகுந்தபடி சிப்செட் வசதி பொருத்தப்பட்டுள்ளது. அதாவது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியானது.

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனானது Realme UI 3.0 OS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவைக் கொண்டிருக்கிறது.

64 எம்பி பிரைமரி கேமரா

64 எம்பி பிரைமரி கேமரா

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 எம்பி பிரைமரி சென்சார் + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செல்பி மற்றும் வீடியோகால் அழைப்புகளுக்கு என 16எம்பி கேமரா முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டெர்னல் மெமரி வசதியுடன் வெளியானது.

டேஷ் எல்லோ, டிரிஃப்டிங் ஒயிட் மற்றும் ஷேட் பிளாக் வண்ண விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது.

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும். 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற பல்வேறு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 3டி விலை விவரங்கள்

ரியல்மி ஜிடி நியோ 3டி விலை விவரங்கள்

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை €469.99 (தோராயமாக ரூ.39,000) எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை €509.99 (தோராயமாக ரூ.42,300) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 3T confirmed to launch on September 16: Expected Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X