3 நாள் தான் இருக்கு: சும்மா இல்ல, ரூ.9000 தள்ளுபடி உடன் Realme 150W சார்ஜிங் 5ஜி ஸ்மார்ட்போன்!

|

பண்டிகை தினத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போட்டிப் போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. இதில் ரியல்மி நிறுவனம் தங்களது கேட்ஜெட்களுக்கு சில்லறை விற்பனையாளர்களுடன் கூட்டு சேர்ந்து தள்ளுபடிகளை வழங்குகிறது. Realme Festive Days விற்பனையின் பகுதியாக இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

Realme Festive Days விற்பனை

Realme Festive Days விற்பனை

Realme Festive Days விற்பனையில் ரியல்மி ஜிடி நியோ 3டி ரூ.9000 தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியானது அக்டோபர் 16 வரை மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இணையதளத்தில் இந்த தள்ளுபடியை பெறலாம்.

பல்வேறு ரியல்மி சாதனங்களும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்

பல்வேறு ரியல்மி சாதனங்களும் தள்ளுபடி விலையில் வாங்கலாம்

Realme Festive Days விற்பனையில் ரியல்மி சி தொடர் ஸ்மார்ட்போன்கள், நார்சோ தொடர் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ப்ரீமியம் ஜிடி ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

இதில் ரியல்மி சி தொடர் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. அதேபோல் இயர்பட்ஸ், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பிற Realme AIoT கேட்ஜெட்களும் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனானது ரூ.9000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதீத தள்ளுபடி விலையில் Realme GT Neo 3T

அதீத தள்ளுபடி விலையில் Realme GT Neo 3T

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனின் நிர்ணய விலையை முதலில் பார்த்துவிட்டு பின் தள்ளுபடி விலையை பார்க்கலாம்.

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.31,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.33,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

எந்தெந்த மாடல்களுக்கு தள்ளுபடி?

எந்தெந்த மாடல்களுக்கு தள்ளுபடி?

தள்ளுபடி விலையை தற்போது பார்க்கலாம் Realme GT Neo 3T ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.20,999 என கிடைக்கிறது. ரூ.9000 தள்ளுபடி இந்த ஸ்மார்ட்போனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிற இரண்டு மாடல்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.22,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.24,999 எனவும் கிடைக்கிறது. ரூ.25,000 விலைப் பிரிவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுவாகும்.

அக்டோபர் 16 வரை மட்டுமே

அக்டோபர் 16 வரை மட்டுமே

பிளிப்கார்ட் இல் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து வாங்கும் போது கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கிறது. புதிய Realme GT Neo 3Tக்கு வங்கிச் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகிறது.

இந்த தள்ளுபடி ஆனது அக்டோபர் 16 வரை மட்டுமே நேரலையில் இருக்கும். ரூ.25,000 விலைப் பிரிவில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 3டி அம்சங்கள்

ரியல்மி ஜிடி நியோ 3டி அம்சங்கள்

டூயல்-சிம் ஆதரவு கொண்ட ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான Realme UI 3.0 மூலம் இயங்குகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.62-இன்ச் அளவிலான Full-HD+ (1,080x2,400 பிக்சல்ஸ்) E4 AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 1,300 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸை வழங்குகிறது மற்றும் HDR10+ ஆதரவைக் கொண்டிருக்கிறது.ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC மூலம் இயக்கப்படுகிறது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம்

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம் பிளஸ் ஆதரவு உள்ளது. இது வெப்பத்தை முற்றிலும் குறைக்கும் வகையிலான டயமண்ட் தெர்மல் ஜெல்லுடன் கூடிய எட்டு கூலிங் லேயர்ஸ் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போனானது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அது 64எம்பி மெயின் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகும். முன்பக்கத்தில் செல்பி ஆதரவுக்கு என 16-மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

விளையாட்டை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனாக, இந்த Realme ஸ்மார்ட்போன் இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட செயலி, மேம்படுத்தப்பட்ட ஹாப்டிக்ஸ் மற்றும் மேம்பட்ட கேமரா அமைப்பு இதில் உள்ளது.

Realme GT Neo 3T இன் சிறந்த அம்சங்களில் ஒன்று 4,500 mAh பேட்டரி உடனான 150W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5,000 mAh பேட்டரி ஆகும்.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 3T 150 Fast Charging 5G Smartphone Now Available at Huge Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X