நாளை அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன்.!
மிகவும் எதிர்பார்த்த ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் மாடல் நாளை (மார்ச் 22) சீனாவில் அறிமுகம் செய்யபப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான சிப்செட், அருமையான கேமரா எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். குறிப்பாக 4D Game Vibration அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 1000 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.
குறிப்பாக இந்த ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5ஜி சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் Sony IMX766 sensor அடக்கம். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரியல்மி நிறுவனம்
சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி சி35
ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,408 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
இந்த புதிய ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் Unisoc T616 சிப்செட் வசதி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ரியல்மி சி35ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். புதிய ரியல்மி சி35 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம்மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி சி35 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ரியல்மி சி35 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications