Home
Mobile

மின்னல் வேகம்- 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு ரியல்மி ஜிடி நியோ 3: எப்போது அறிமுகம் தெரியுமா?

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 29 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுகம் குறித்து ரியல்மி இந்திய தலைவர் மாதவ் ஷெத் அறிவித்தார். ரியல்மி ஜிடி நியோ 3 குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்த வெளியீட்டுத் தேதியை மாதவ் ஷெத் அறிவித்தார். ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 150 வாட்ஸ் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் சந்தைக்கு வரும் முதல் ரியல்மி ஸ்மார்ட்போன் ஆகும். ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது சில நாட்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரியல்மி ஜிடி நியோ 3

ரியல்மி ஜிடி நியோ 3

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது ஈர்க்கப்பட்ட வடிவமைப்போடு வரும். ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் 150 வாட் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதன்மூலம் ஸ்மார்ட்போனை 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம் என ரியல்மி கூறுகிறது.

30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்

30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் 80 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதன்மூலம் 30 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யலாம் என ரியல்மி தெரிவிக்கிறது. வரவிருக்கும் ஒன்பிளஸ் 10 ஆர் ஸ்மார்ட்போனும் அதே வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் விலை குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. அறிமுகத் தினத்தன்று ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் விலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் சீன விலையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்

எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் 80 வாட்ஸ் பதிப்பு விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.24,000 ஆக இருக்கிறது. அதேபோல் இதன் 150 வாட்ஸ் வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.33,000 ஆக இருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது முதன்மை ரக அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் 2கே டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனத்தின் டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் உயர் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 1000 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதம் மற்றும் எச்டிஆர் 10 ப்ளஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும், ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சென் 8100 செயலி மூலம் ஆதரிக்கப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் ரியல்மி யூஐ 3.0 மூலம் இயங்குகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11-க்கு பதிலாக ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு இந்தியாவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை சோனி ஐஎம்எக்ஸ்766 ஆதரவைக் கொண்டிருக்கும், இதன் முதன்மை கேமராவானது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மூலம் வீடியோக்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது.

150 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு

150 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு

பின்புற கேமராவில் 119 டிகிரி வியூ ஃபீல்ட் மற்றும் மேக்ரோ கேமராவுடன் கூடிய அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் வசதியைக் கொண்டிருக்கும். ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் பஞ்ச் ஹோல் கட்டமைப்போடு செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது இரண்டு வகைகளில் கிடைக்கும், அது 80 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5000 எம்ஏஎச் பேட்டரி, 150 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4500 எம்ஏஎச் பேட்டரி ஆகும்.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 3 Smartphone Going to Launch on April 29: Expected Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X