விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 2டி.!
சமீபத்தில் சீனாவில் புதிய ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் மற்ற நாடுகளில் விரைவில் அறிமகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் முழு விவரங்களை சற்று விரிவாகாப் பார்ப்போம். இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதி உள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் தரமான Dimensity 1200 SoC சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியுடன் வெளிந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மாரட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைஎடுக்க முடியும்.

இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றம் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வெளிவந்துள்ளது ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி நியோ 2டிஸ்மார்ட்போன். மேலும் என்எப்சி, ஜிபிஎஸ், வைஃபை 6, ப்ளூடூத் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன். ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.24,500-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications