Home
Mobile

அசத்தலான சிப்செட் வசதியுடன் ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வெளிவந்துள்ளது ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி நியோ 2டி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் விலை CNY 2,099 (இந்திய மதிப்பில் ரூ.24,500)
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2டி மாடலின் விலைCNY 2,399 (இந்திய மதிப்பில் ரூ.28,100) என்று கூறப்பட்டுள்ளது.

 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன் 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்
தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்தபுதிய ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி நியோ 2டி

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர அசத்தலான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன்.

 இயங்குதளத்தை

இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் வசதி உள்ளது.மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த
ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன். விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கூட கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்கொடுக்கப்பட்டுள்ளது.

 4500 எம்ஏஎச் பேட்ட

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இதுதவிர என்எப்சி,ஜிபிஎஸ், வைஃபை 6, ப்ளூடூத் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 2டி ஸ்மார்ட்போன்.அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 2T Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X