12ஜிபி ரேம், 64 எம்பி கேமரா, 65 ஃபாஸ்ட் சார்ஜிங்: ரியல்மி ஜிடி நியோ 2 அறிமுகம்- குறைந்த விலை உச்ச அம்சங்கள்!

|

ரியல்மி ஜிடி நியோ 2 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி, 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. ரியல்மி ஜிடி நியோ 2 விலை குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.31,999 ஆக இருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி ஜிடி நியோ 2

ரியல்மி ஜிடி நியோ 2 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ரியல்மி போன் ரியல்மி ஜிடி நியோவின் வாரிசாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் அசல் வடிவம் இந்தியாவிற்கு வரவில்லை எனவும் மே மாதம் ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் என அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது.

5ஜி இணைப்புடன் வரும் ஸ்மார்ட்போன்

5ஜி இணைப்புடன் வரும் ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்புடன் வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அடுத்த தலைமுறை இணைய வேகத்துக்கு அதிவேகத்தில் தயாராகி வருகிறது. அதற்கு ஏற்ற அணுகலுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. ரியல்மி ஜிடி நியோ 2-ன் முக்கிய சிறப்பம்சங்கள் டால்பி அட்மோஸ் ஆதரவுடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உதவுகிறது. அதோடு 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வெப்ப மேலாண்மைக்காக ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் பிளஸ் ஹீட் சிங்க் சேம்பர் ஆகியவை அடங்கும். ரியல்மி ஜிடி நியோ 2 சாதனமானது சாம்சங் கேலக்ஸி எம்52, எம்ஐ 11எக்ஸ் 5ஜி மற்றும் போக்கோ எஃப்3 ஜிடி போன்றவைகளுடன் வருகிறது.

ரியல்மி ஜிடி நியோ 2 விலை

ரியல்மி ஜிடி நியோ 2 விலை

இந்தியாவில் ரியல்மி ஜிடி நியோ 2 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். இந்தியாவில் ரியல்மி ஜிடி நியோ 2 விலை குறித்து பார்க்கையில், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கும் வேரியண்ட் விலை ரூ.35,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் வருகிறது. அது நியோ பிளாக், நியோ ப்ளூ மற்றும் நியோ க்ரீன் வண்ண விருப்பங்களில் வருகிறது.

பிளிப்கார்ட், ரியல்மி.காம் தளத்தில் வாங்கலாம்

பிளிப்கார்ட், ரியல்மி.காம் தளத்தில் வாங்கலாம்

ரியல்மி ஜிடி நியோ 2 அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 12 மணி முதல் பிளிப்கார்ட், ரியல்மி.காம் மற்றும் நாட்டின் பிரதான சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 2 அறிமுக சலுகைகளும் வழங்கப்படுகிறது. பண்டிகை கால விற்பனையாக ரூ.7000 வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 16 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் கிடைக்கும்.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட்

ரியல்மி ஜிடி நியோ 2 கடந்த மாதம் சீனாவில் அடிப்படை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் உடன் வருகிறது. இந்த வேரியண்ட் சீனா மதிப்பு சிஎன்ஒய் 2499 ஆக இருக்கிறது. தோராயமாக ரூ, 29,300 ஆக இருக்கிறது. அதேபோல் இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதன் விலை தோராயமாக ரூ.35,100 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ 2 சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி நியோ 2 சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி நியோ 2 சிறப்பம்சங்கள், ரியல்மி ஜிடி நியோ 2 இரட்டை சிம் (நானோ) ஆதரவோடு வருகிறது. ரியல்மி ஜிடி நியோ ஆண்ட்ராய்டில் 11-ல் ஆண்ட்ராய்டு 11 இல் ரியல்மி யுஐ 2.0 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சாம்சங் இ4 டிஸ்ப்ளே உடன் வருகிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. 1300 நிட்ஸ் உச்சநிலை பிரகாசத்துடன் வருகிறது. காட்சி 600 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது எச்டிஆர் 10+ ஆதரவை கொண்டுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 2 குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி உடன் வருகிறது. இது அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது. இதில் டைனமிக் ரேம் விரிவாக்க ஆதரவுடன் வருகிறது.

புகைப்படங்கள் மற்றும் வீடியோ அம்ச ஆதரவு

புகைப்படங்கள் மற்றும் வீடியோ அம்ச ஆதரவு

புகைப்படங்கள் மற்றும் வீடியோ அம்சத்திற்கு ரியல்மி ஜிடி நியோ 2 ஆனது 8 மெகாபிக்சல் அல்ட்ரை வாட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதி

256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதி

புதிய ரியல்மி ஜிடி நியோ 2 சாதனமானது 256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்ஃஎப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உடன் வருகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சாதனம் 65 வாட்ஸ் சூப்பர் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டுள்ளது. 36 நிமிடங்களில் ஸ்மார்ட்போனை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது உயர்ரக அம்சங்களுடன் அதற்கு ஏற்ற விலையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 2 Smartphone Launched With 12GB RAM, Android 11, 65W Fast Charging: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X