மிகவும் எதிபார்த்த ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை மற்றும் விபரங்கள்.!

|

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஸ்னாப்டிராகன் சிப்செட், 64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 2 விலை

ரியல்மி ஜிடி நியோ 2 விலை

  • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,499 (இந்திய மதிப்பில் ரூ.28,500)-ஆக உள்ளது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ.30,800)-ஆக உள்ளது.
  • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ.34,200)-ஆக உள்ளது.
  • ரியல்மி ஜிடி நியோ 2 அம்சங்கள்

    ரியல்மி ஜிடி நியோ 2 அம்சங்கள்

    ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் சாம்சங் இ4 டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 + ஆதரவு, 600 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாக
    கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன்.

    எப்போனு சொல்லுங்கப்பா- ரியல்மி சாதனத்துக்கு அதீத தள்ளுபடி: பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021!எப்போனு சொல்லுங்கப்பா- ரியல்மி சாதனத்துக்கு அதீத தள்ளுபடி: பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை 2021!

    னாப்டிராகன் 870 சிப்செட்

    இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும்எதிபார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் ஐபோன் 'மினி' சகாப்தம் முடிவடைகிறதா? இனி அப்பிளில் மினி வெர்ஷன் கிடையாதா? என்னப்பா சொல்றீங்க?ஆப்பிள் ஐபோன் 'மினி' சகாப்தம் முடிவடைகிறதா? இனி அப்பிளில் மினி வெர்ஷன் கிடையாதா? என்னப்பா சொல்றீங்க?

    நியோ 2 ஸ்மார்ட்போனில்

    ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

    64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி

    ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: அமேசான் லஞ்ச விவகாரம்- என்ன நடந்தது., எவ்வளவு தொகை?சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை: அமேசான் லஞ்ச விவகாரம்- என்ன நடந்தது., எவ்வளவு தொகை?

    5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது

    இந்த ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

     ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

    5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ரியல்மி ஜியோ நியோ 2 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Neo Green, Pale Blue, மற்றும்
    Shadow Black நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 2 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X