ஜூலை 21: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூலை 21-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் லெதர் சூட்கேஸை போன்றஒரு தனித்துவமான பின் பக்க பேனல் வடிவமைப்பு வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிகஎதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி சிப்செட் வசதி
மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர ஆண்டராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல்.

120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்
ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் சாம்சங் இ4 சூப்பர் அமோலேட் டிஸ்பிளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம் வெளிவரும்.

64எம்பி பிரைமரி சென்சார்
வெளிவந்த தகவலின் அடிப்படையில் 64எம்பி பிரைமரி சென்சார் உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இந்த சாதனத்தின் பின்புறம் உள்ளன என்றும். அதில் 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 மெயின் சென்சார் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர தனித்துவமான செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

குறிப்பாக இந்த சாதனத்தின் விளிம்புகளில் சாம்பல் நிற பின்புற வளைவுகள் மற்றும் ரியல்மி பிராண்டிங் மற்றும் வடிவமைப்பாளர் ஆன நாவோடோ புகாசாவாவின் கையொப்பம் இடம்பெற்றுள்ளதை காண முடிகிறது.

மேலும் ரியல்மி நிறுவனத்தின் துணைத் துலைவர், குளோபல் மார்க்கெட்டிங் தலைவருமான ஜு குய் சேஸ், வெய்போ வழியாக ரியல்மி ஜிடி மாஸ்டர் பதிப்பின் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதேபோல் இந்த சாதனம் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, நீண்ட நேரம் செயலபடும் தரமான பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications