Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன்.! விலை மற்றும் விபரங்கள்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனை இன்று (ஆகஸ்ட் 26) பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைத்தளங்களில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் 128ஜிபி மெமரி கொண்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் ரூ.25,999-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல் ரூ.27,999 விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் மாடல் ரூ.29,999-விலையிலும் விற்பனைக்கு வரும் என்றுதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வலைத்தளங்களில்

குறிப்பாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைத்தளங்களில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் குறிப்பிட்ட சில சலுகைகளும் இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு இந்த சாதனம் அருமையாக பயன்படும். பின்பு Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின்

ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம்

இந்த ரியல்மி ஜிடி மாஸ்டர் எடிஷன் சாதனத்தில் 4300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போ

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் Cosmos Blue, Luna White, Voyager Grey நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Realme GT Master Edition Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X