Realme ருத்ர தாண்டவம்.. 200MP டெலிஃபோட்டோ கேமரா, 7000mAh பேட்டரி உடன் புதிய 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒரு கட்டத்தில் கேமராக்கள் மீது மட்டுமே கவனம் செலுத்திய பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது பெரிய பேட்டரிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன. இதற்கிடையில் ரியல்மி நிறுவனம் மிகவும் புத்திசாலித்தனமாக தரமான கேமரா மற்றும் பிக் பேட்டரி ஆகிய இரண்டையும் கலந்து 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.
அது 2 ஸ்மார்ட்போன்களை உள்ளடக்கிய ரியல்மி ஜிடி 8 சீரீஸ் (Realme GT 8 Series) ஸ்மார்ட்போனாகும். இதன்கீழ் ரியல்மி ஜிடி 8 (Realme GT 8) மற்றும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும். இந்த சீரிஸ் அடுத்த மாதம், அதாவது வருகிற அக்டோபரில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி 8 சீரீஸ் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Realme GT 8 and Realme GT 8 Pro Expected Specifications)? ரியல்மி ஜிடி 8 மற்றும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஆகிய 2 மாடல்களின் ரியர் கேமரா செட்டப்பிலும் 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா (200MP Telephoto Camera) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே பிளாட் ஆன 2கே அமோஎல்இடி டிஸ்பிளேவையும் (2K AMOLED Display) கொண்டிருக்கலாம்.
சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது, இந்த வார இறுதியில் குவால்காம் (Qualcomm) நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ள ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மூலம் இயக்கப்படும் முதல் போன்களாக இருக்கலாம்.
இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாடு டிஸ்பிளே சைஸ் மாற்றம் பேட்டரி டிப்பார்ட்மென்ட்டில் இருக்கலாம். ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன ரியல்மி ஜிடி 8 ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 7000mAh பேட்டரியை பேக் செய்யலாம்
செக்யூரிட்டி யை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறும் என்றும், இது மெட்டல் ஃபிரேம் உடன் பொருத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே ரியல்மி ஜிடி 8 மற்றும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஆகிய இரண்டும், கடந்த ஆண்டு அறிமுகமான ரியல்மி ஜிடி 7 சீரிஸ் (Realme GT 7 Series) ஸ்மார்ட்போன்களின் அப்கிரேடட் வெர்ஷன்களாக இருக்கும்.
ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Realme GT 7 Pro Specifications):
- 6.78 இன்ச் FHD+ LTPO AMOLED டிஸ்பிளே
- 120 Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- டால்பி விஷன் மற்றும் HDR10+ ஆதரவு
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite SoC)
- 16GB வரை LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான Realme UI 6.0 ஸ்கின்
- 50 மெகாபிக்சல் Sony IMX906 [ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் Sony IMX882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் Sony IMX355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் - 5,800mAh பேட்டரி
- இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி 69 ரேட்டிங்
- அளவீட்டில் 162.45 x 76.89 x 8.55மிமீ
- எடையில் சுமார் 222 கிராம்


Click it and Unblock the Notifications








