Home
Mobile

இந்தியாவில் அறிமுகமானது புது Realme 5ஜி போன்.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், ஒஎல்இடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ அம்சங்கள் (Realme GT 8 Pro Specifications): 6.79-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1440 x 3136 பிக்சல்ஸ், 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், டால்பி விஷன், 100 சதவீதம் டிசிஐ பி3 கலர் காமட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் அறிமுகமானது புது Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

அதேபோல் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3எனம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் வசதியுடன் இந்த ரியல்மி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனில் உள்ளது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி Ricoh GR anti-glare மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது. 120x வரை ஹைப்ரிட் ஜூம் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகள் இந்த போனில் உள்ளன. IP66+IP68+IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ போன் வெளிவந்தது.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) போன் அம்சங்களும் இந்த போனில் உள்ளது. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo), நேவிக் (NavIC), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

7000mAh பேட்டரி உடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

இந்தியாவில் அறிமுகமானது புது Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி ஜிடி 8 ப்ரோ மாடலின் விலை

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 8 ப்ரோ மாடலின் விலை ரூ.72,999-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 8 ப்ரோ மாடலின் விலை ரூ.78,999-ஆக உள்ளது.
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 8 ப்ரோ Dream Edition மாடலின் விலை ரூ.79,999-ஆக உள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்திய ஆன்லைன் ஸ்டோர் வழியாக இந்த புதிய போனை வாங்கலாம். மேலும் இந்த போனுக்கு ரூ.5000 வரை வங்கி சலுகையும் உள்ளது. வரும் நவம்பர் 25-ம் தேதி இந்த போன் விற்பனைக்கு வரும். தற்போது இந்த போனின் முன்பதிவு தொடங்கி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 8 Pro With 7000mAh Battery launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X