நாளை அறிமுகமாகும் இந்த Realme 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் நாளை (நவம்பர் 20) இந்தியாவில் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகமாகும். பின்பு பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ அம்சங்கள் (Realme GT 8 Pro Specifications): 6.79-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Elite Gen 5 SoC) உடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் Sony's Lytia LYT-700 கேமரா + 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என்று தகல் வெளியாகி உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியுடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7000mAh பேட்டரி உடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ரியல்மி ஜிடி 8 ப்ரோ போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.60,000 அல்லது ரூ.65,000 பட்ஜெட்டில் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








