Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. 120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 120X ஜூமிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் இன்று களமிறங்க இருக்கிறது. 7000mAh பேட்டரி, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 200 எம்பி கேமரா, 120X ஜூமிங், IP69 ரேட்டிங் போன்ற பீச்சர்களில் மிரளவிட இருக்கிறது. இந்த ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விற்பனை மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வெளியீட்டுக்கு பிறகு விற்பனை தேதி தெரியவரும். இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களும் உறுதியாகிவிட்டன. அதை இப்போது பார்க்கலாம். அதேபோல எதிர்பார்க்கப்படும் விலையையும் தெரிந்து கொள்ளலாம்.

வெச்சி செஞ்சிட்டாங்க.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. எந்த மாடல்?

ரியல்மி ஜிடி 8 ப்ரோ அம்சங்கள் (Realme GT 8 Pro Specifications): இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் 7000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2K சூப்பர் ரெசொலூஷன் மற்றும் ஐ புரொடெக்சன் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 எஸ்ஓசி (Snapdragon 8 Elite Gen 5 SoC) கிடைக்கிறது.

இந்த சிப்செட் மட்டுமல்லாமல், ஹைப்பர் விஷன் ஏஐ சிப் (Hyper Vision AI Chip) கிடைக்கிறது. இது விசுவல் பர்ஃபாமென்ஸ் கொடுக்க கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால், இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரீமியம் கேமிங் மாடலாக இருக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் 50W வயர்லெஸ் சார்ஜிங் வருகிறது.

7K அல்டிமேட் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கிடைக்கிறது. சிமெட்ரிக் மாஸ்டர் அகஸ்டிக் ஸ்பீக்கர்கள் (Symmetric Master Acoustic Speakers) கிடைக்கின்றன. மேலும், அல்ட்ரா ஹெப்டிக் மாஸ்டர் (Ultra Heptic Master) கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட கன்ட்ரோலர் பீல் கொடுக்கும். ஜிடி பூஸ்ட் 3.0 (GT Boost 3.0) கிடைக்கிறது. இது கேமிங் பிரியர்களுக்கு ஏர்ப பவர் ஆப்டிமைஸ் கொடுக்கும்.

மேலும், எனர்ஜி மேனேஜ்மென்ட், சூப்பர் ஃபிரேம் என்ஜின் ஆகிய சப்போர்ட் கொடுக்கிறது. இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ரிக்கோ ஜிஆர் (RICOH GR) கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி ஆன்டி-கிளார் மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 200 எம்பி அல்டிமேட் டிராவல் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

இந்த டெலிபோட்டோவில் 120X சூப்பர் ஜூமிங் கிடைக்கிறது. இதுவொரு ஸ்விட்சிங் டிசைன் கேமரா மாடலாகும். அதாவது, கேமரா டெகோ அசம்பிள் செய்து கொள்ளும்படி கிடைக்கும். 120X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கிடைக்க இருக்கிறது. இது கேமிங்குங்கு ஏற்ப யுஐ கொடுக்க இருக்கிறது.

இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ போனில் டயரி ஒயிட் (Dairy White) மற்றும் அர்பன் ப்ளூ (Urban Blue) கலர்கள் வர இருக்கின்றன. சீன மார்கெட்டில் ரூ.49,450 பட்ஜெட்டில் களமிறங்கியது. ஆனால், இந்தியாவில் ரூ.59,999 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. 12 மணிக்கு பிறகு விலை மற்றும விற்பனை தேதி தெரியவரும். கேமிங் பிரியர்களுக்கு பக்கா ஆப்ஷனாக இது இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 8 Pro With 200MP Camera 7000mAh Battery Launching Today Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X