அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும் புதிய Realme 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. எந்த மாடல்?
சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.
அதுவும் இந்த புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ அம்சங்கள் (Realme GT 8 Pro Specifications): 6.79-இன்ச் QHD+ AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 2கே ரெசல்யூஷன், 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், 3200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 100 சதவீதம் DCI-P3கலர் கேமட், 100 சதவீதம் sRGB ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
அதேபோல் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் வசதி இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா + 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா + 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் 30 fps இல் 8K வீடியோ ரெக்கார்டிங் ஆதரவை வழங்குகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆர்1 எக்ஸ் கிராபிக்ஸ் சிப் வசதியும் இந்த அட்டகாசமான ரியல்மி ஜிடி 8 ப்ரோ போனில் உள்ளது.

7000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.50,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








