முரட்டு காம்பினேஷன்.. Snapdragon 8 Elite 2 சிப், 200MP Periscope கேமரா, 100W சார்ஜிங், 7000mAh பேட்டரி!
ஒருபக்கம் ரூ.10,000 பட்ஜெட்டிலும் தரமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும்.. மறுபக்கம் பவர்ஃபுல் ஆன பிளாஷிப் ஸ்மார்ட்போனையும் கொண்டு வரும்.. ரியல்மி (Realme) நிறுவனத்தால் இரண்டையுமே திறம்பட செய்ய முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கும்படியான ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்து உள்ளது.
2025 அக்டோபரில் குவால்காம் (Qualcomm) நிறுவனம் அதன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்பை (Snapdragon 8 Elite 2 chip) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல பிராண்டுகள் இந்த புதிய சிப்பை உள்ளடக்கிய தங்கள் பிளாக்ஷிப் போன்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் ரியல்மி நிறுவனமும் சேர்ந்துள்ளதாக தெரிகிறது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த நவம்பர் 2024 இல் அறிமுகமான ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்பை (Snapdragon 8 Elite chip) பேக் செய்தது. ஆக ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் "அதே நேரத்தில்" அறிமுகமாக வாய்ப்புள்ளது. மேலும் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின் படி இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் கொண்டு இயங்கும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2கே ரெசல்யூஷன் (2K Resolution) உடனான ஒரு பிளாட் ஆன ஓஎல்இடி டிஸ்பிளேவை (Flat OLED Display) கொண்டிருக்கும் என்றும், இது அதன் முன்னோடியை போலவே, அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-screen fingerprint sensor) உடன் வரும் என்றும் டிப்ஸ்டர் கூறியுள்ளார் .
கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா (200 megapixel periscope telephoto camera) இருக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் மிடில் பிரேம் -ஐ கொண்டிருக்கும் என்றும், இது 100W சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும், பேட்டரியைப் பொருத்தவரை இது 7000mAh க்கும் குறைவாக இருக்காது என்று டிப்ஸ்டர் வெளிப்படுத்தி உள்ளார்.
இதற்கிடையில் ரியல்மி நிறுவனம் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று ரியல்மி ஜிடி 7 (Realme GT 7) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் பைபாஸ் இது சார்ஜிங் ஆதரவு உடனான ஒரு பெரிய 7,200mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,
மேலும் ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் ஆனது கிராஃபீன் ஐஸ் (ப்ளூ), கிராஃபீன் ஸ்னோ (ஒயிட்) மற்றும் கிராஃபீன் நைட் (பிளாக்) ஆகிய 3 கலர்களில் வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.சீன அறிமுகத்தை தொடர்ந்து இது இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ஜிடி 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 - ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரியல்மி ஜிடி 7 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (Realme GT 7 Specifications Expected)?
- பிஓஇ-ஆல் தயாரிக்கப்பட்ட ஓஎல்இடி பேனல்
- 1.5கே ரெசல்யூஷன்
- 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- ஓஐஎஸ் ஆதரவு உடன் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட்
- 100W வயர்டு சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு
- பெரிய 7,200mAh பேட்டரி
- ஐபி68 / ஐபி69 ரேட்டிங்
- அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- எடையில் 203 கிராம்
- 8.25 மிமீ ஸ்லிம் டிசைன்


Click it and Unblock the Notifications