Home
Mobile

அடிச்சு புடிச்சு வாங்க போறாங்க.. மாற்றக்கூடிய கேமரா மாட்யூல் உடன் புதிய Realme போன்.. 3 டிசைன்க்கு மாற்றலாம்!

ரியல்மி நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ரியல்மி ஜிடி 8 சீரீஸ் (Realme GT 8 Series) ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் ரியல்மி ஜிடி 8 ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்த 2 ஸ்மார்ட்போன்களின் "சரியான வெளியீட்டு தேதி எப்போது?" என்கிற அறிவிப்பிற்காக பலரும் காத்திருக்கும் வேளையில், ரியல்மி ஜிடி 8 ப்ரோ மாடலில் ஸ்வாப் செய்யக்கூடிய கேமரா மாட்யூல் (Swappable camera module) இருக்கும் என்பதை ரியல்மி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

மாற்றக்கூடிய கேமரா மாட்யூல் உடன் புதிய Realme போன்!

அதாவது ரியல்மியின் இந்த புதிய வடிவமைப்பு ஆனது ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பயனர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா டிசைனை கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கும். இதுகுறித்த பகிரப்பட்ட ஒரு முன்னோட்ட வீடியோவானது - கேமரா மாட்யூலுக்கான மூன்று வடிவமைப்புகளை எடுத்துக்காட்டுகிறது. ஒன்று வட்ட வடிவிலும், இன்னொன்று சதுர வடிவிலும் மற்றும் கடைசியாக உள்ளது ஒழுங்கற்ற ரோபாட்டிக்ஸ் ஆல் ஈர்க்கப்பட்ட வடிவத்தையும் காட்டுகிறது.

பயனர்கள் இந்த மாட்யூல்களை பிரித்து அதை மறுசீரமைக்க முடியும் என்பது போல் தெரிகிறது. உண்மையிலேயே இது மிகவும் தனித்துவமான ஒரு வடிவமைப்பாக உள்ளது. இது பலரையும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க தூண்டலாம். இருப்பினும் தற்போது வரையிலாக இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா சென்சார்கள் பற்றிய விவரங்களை ரியல்மி வெளியிடவில்லை.

லீக் ஆன தகவல்களை பொறுத்தவரை இது 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும். 200 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் உடன் இது அறிமுகமாகும் பட்சத்தில், ரியல்மி நிறுவனமானது ஹானர் மற்றும் விவோ உடன் இணையும்.

இவ்விரு நிறுவனங்களும் 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்களை வரவிருக்கும் ஹானர் மேஜிக் 8 சீரிஸ் (Honor Magic 8 Series) மற்றும் விவோ எக்ஸ்300 சீரிஸ் (Vivo X300 Series) ஸ்மார்ட்போன்களில் பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை ரியல்மி ஜிடி 8 ப்ரோவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் கொண்ட பிளாட் டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி என்கிற பெரிய பேட்டரியை பேக்ஸ் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் நடக்கும் சீன அறிமுகத்தை தொடர்ந்து, விரைவில் இது இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் ரியல்மி ஜிடி 7 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்

- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Realme GT 8 Pro Swappable Camera Module Users Can detach rearrange it in 3 Different Designs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X