மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. 200MP கேமரா.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. வருகிறது புதிய Realme போன்..
ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய ரியல்மி போன் விரைவில் சீனாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது அதன்பின்பு இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ போன் அறிமுகமாகும். இந்நிலையில் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி ஜிடி 8 ப்ரோ அம்சங்கள் (Realme GT 8 Pro Specifications): சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2(Qualcomm Snapdragon 8 Elite 2) சிப்செட் உடன் இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனில் வீடியோ எட்டிங் ஆப் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரவுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதி மற்றும் கேமரா அமைப்புக்;கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
குறிப்பாக 6.83-இன்ச் மைக்ரோ-குவாட்-கர்வ்டு டிஸ்பிளே (Micro-quad-curved Display) உடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 1.5கே ரெசல்யூஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.
3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor)வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவு இந்த போனில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு மேம்பட்ட ஏஐ அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.
7000mAh பேட்டரி உடன் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சார்ஜிங் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி அதரவுகளுடன் இந்த ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.


Click it and Unblock the Notifications